Thursday, October 28, 2010

XP-க்கு ஆப்பு! இது நாட்டாமை தீர்ப்பு!! + கூடுதல் I.T செய்திகள்.jaffnanet.blogspot.com

XP-க்கு ஆப்பு! இது நாட்டாமை தீர்ப்பு!! + கூடுதல் I.T செய்திகள்


மைக்ரோசாஃப்ட் விண்டோசின் அடுத்த ரிலீஸ் "விண்டோஸ் 8" 2012-ஆம் வருடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 7 2009-ல் வந்தது. அதை வைத்து பார்த்தால், இனிமேல் சுமார் மூன்று/நான்கு  வருடங்களுக்கு ஒரு முறை புது விண்டோஸ் ரிலீஸ் செய்ய மைக்ரோசாப்ட் திட்டம் போட்டு உள்ளதாக தெரிகிறது.

விண்டோஸில் எட்டு போட்டு மைக்ரோசாஃப்ட் ஷொட்டு வாங்குமா? குட்டு வாங்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


XP-க்கு ஆப்பு. இது நாட்டாமை தீர்ப்பு.

இனிமேல் விண்டோஸ் XP-யை புது கணினியோடு pre-install செய்து விற்கக்கூடாது என்று மைக்ரோசாப்ட் கணினி தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டது.  விஸ்டாவில் இருந்த பல பிரச்சனைகளால், மைக்ரோசாப்ட் XP-யை அப்படியே விட்டுவைத்திருந்தது.


விண்டோஸ் 7தான் வரலாற்றிலேயே அதிக வேகமாக விற்பனையாகும் ஆபரேடிங் சிஸ்டம் என்று பெயர் வாங்கியுள்ளது.

ஒரு நொடிக்கு 7½ லைசென்ஸ்கள் விற்பனை ஆகிறது என்று, வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள் கணக்கு போட்டு சொல்லி இருக்கிறார்கள். 

பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் வந்து  7½ பிடிக்காமல் இருந்தால் சரி.
சீகேட் உலகின் முதல்  3 TB (External) ஹார்ட் டிஸ்க்கை விற்பனைக் கொண்டுவந்துவிட்டது. TB என்றால் Terabyte. இதில் 120 High Definition சினிமா படங்கள் அல்லது 1500 வீடியோ கேம்களையும் சேமித்து வைக்க முடியும்.


கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு 12 வயசு பையன் அலெக்ஸ் மில்லர்,  ஃபயர்பாக்சில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்து மொசில்லா பெளண்டேஷனிடமிருந்து 3000 டாலர் வெகுமதி வாங்கிவிட்டான். நம்ம பசங்களும் இருக்காங்களே!


லேட்டஸ்டாக ஆப்பிள் வெளியிட்ட மேக்புக் ஏர்  கணினிகளில்  வழக்கமாக சேர்க்கப்படும் அடோபி ஃபிளாஷ் மென்பொருள் இல்லை.  ஆனால் மேக்கில் அடோபி ஃபிளாஷ் வேலை செய்வதை ஆப்பிள் தடுக்கவில்லை. அதனால் மேக் பயனர்கள் தாங்களாகவே ஃபிளாஷை டவுன்லோடு செய்து நிறுவிக்கொள்ளலாம்.



சுமார் 8.3 சதவீதம் சந்தை பங்கு உள்ள மேக் ஓஸ் X ஆபரேடிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்ஷன் 10.7 "Lion" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Mac OS X-ன் அனைத்து வெர்ஷன்களின் பெயர் பின்வருமாறு:

 10.0 Cheetah
 10.1 Puma
 10.2 Jaguar
 10.3 Panther
 10.4 Tiger
 10.5 Leopard
 10.6 Snow Leopard
 10.7 Lion

Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!.jaffnanet.blogspot.com


சமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும் எதையும் அதிகாரபூர்வமாக வழங்கவில்லை.

2010 வருட முதல் பாதியில்தான், கூகிள் டாக்ஸ் போன்ற ஆன்லைன் ஆஃபீஸ் அப்ளிகேஷன்களை மைக்ரோசாஃப்ட் அளிக்க இருக்கிறது.

Zoho. Com, கூகிள் டாக்ஸ் போன்று
Zoho CRM,
Zoho Recruit,
Zoho Invoice உட்பட நிறைய ஆன்லைன் அப்ளிகேஷன்களை உருவாக்கி தனக்கென்று ஒரு நல்ல பேர் வாங்கி இருக்கிறது.


மைக்ரோசாஃப்டின் இந்த கருத்துக்கு Zoho-வின் பதிலடி முற்றிலும் எதிர்பாராத வகையில் இருந்தது.

”ஆஹா! ஆஹா!! நாங்க Fake Office-னு மைக்ரோசாஃப்டே மெடல் கொடுத்துவிட்டது! இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் தெரியுமா!” என்று Zoho CEO தன் கம்பெனி ப்ளாகில் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மேலும் அவர் “Zoho-வை பயன்படுத்த யாரும் காசு கொடுத்து சிடியோ டிவிடியோ வாங்க வேண்டாம். பெரிய சைஸ் ஃபைல் எதுவும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நூற்றுக்கணக்கான டாலர்கூட கொடுக்கத் தேவையில்லை. ”

”Zoho.com போய் லாகின் செய்தாலே போதும். உடனே எல்லா அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த துவங்கிவிடலாம்.”

”அதனால்தான் மைக்ரோசாஃப்டுக்கு நாங்கள் Fake Office-ஆக தெரியுது. ”

”ஒருவர் தனது ஃபீல்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதாலேயே, மற்ற போட்டியாளர்களை Fake என்று சொல்வது சரியென்றால், நாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.”

”Search-ல் கூகிள் முதலிடத்தில் உள்ளது. அதனால் உங்கள் Bing-ஐ “Fake Search" என்று பெயரிட்டு அழைத்தால் சரியாக இருக்குமா?”


மைக்ரோசாஃப்ட் MS-Office-ல் 90% ஆபரேடிங் லாபம் அடிப்பதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு விட்டார்களா Zoho.com?

ட்விட்டரில் இதற்கு என்று ஒரு பக்கம்
http://twitter.com/fakeoffice

FakeOffice.Org என்று ஒரு வெப்சைட்.

Fake Office - The movie என்று ஒரு இசை டாக்குமென்டரி என்று பட்டையை கிளப்பிவிட்டார்கள்.



அந்த ட்விட்டர் பக்கத்தை பார்த்தால் ”மைக்ரோசாஃப்ட் Zoho-வை Fake office என்று சொல்கிறது. அப்படி என்றால் மைக்ரோசாஃப்டின் Zune மீடியா பிளேயரை எப்படி அழைப்பது? ” என்று ஒரு ட்வீட் கேட்கிறது.

”இதுதான் Fake office-னா எனக்கு இன்னும் நிறைய வேண்டும்”- இப்படியும் ஒரு குரல்.

இந்தக் கூத்து, Zoho.com பற்றி தெரியாதவர்கள்கூட Zoho-வை பற்றி தெரிந்துகொள்ள ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது.

விட்டுக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! எதை? யாருக்கு?.jaffnanet.blogspot.com


Recession-னு சொல்லி, மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் 1,400 தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது.

அப்புறம்தான், 25 பேருக்கு settlement-ஆ கொடுத்த பணத்தில், கொடுக்க வேண்டியதை விட தவறாக, சுமார் $200 முதல் $5000-த்துக்கும் மேல் அதிகமாக கொடுத்ததாக கண்டுபிடித்தது.

உடனே அந்த 25 பேருக்கு கடிதம் எழுதி, தெரியாமல் அதிகமாக கொடுத்து விட்டதாகவும், excess பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படியும் கேட்டுக்கொண்டது.

இந்த லெட்டரை பார்த்து கடுப்பான ஒரு worker சும்மா இல்லாமல், ஒரு வெப்சைட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த வெப்சைட், மைக்ரோசாஃப்ட்டிடம் இந்த கடிதம் உண்மைதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே தன்னுடைய வலைத்தளத்தில் அந்த கடிதத்தை போட்டுவிட்டது.


விஷயத்தை கேள்விப்பட்ட ஒவ்வொருத்தரும், பலவித reaction கொடுக்க ஆரம்பித்தனர். நான் இணையத்தில் படித்த கமெண்டுகளில் சில....

”மைக்ரோசாஃப்ட்தான் 20 பில்லியன் டாலர் ($20 Billion) பணம் வெச்சு இருக்குதே. அந்த excess பணம் திருப்பி வரலேன்னா கம்பெனியை இழுத்து மூடிட்டா போகப்போறாங்க.”

"அவிங்களே வேலை போச்சேன்னு கஷ்டத்திலே இருக்காங்க. அவங்ககிட்டே போய் நீ வாங்கின பணத்தில் ஒரு amount திருப்பி கொடுடான்னா கொடுமைடா சாமி”

”வேற என்ன நடந்துருக்கும். செட்டில்மெண்ட் கணக்கை Microsoft Excel யூஸ் செய்து போட்டு இருப்பாங்க. அதான் இந்த பிரச்சனை” என்று நக்கல் கமெண்ட் வேறே.
இப்படியெல்லாம், ஒவ்வொருத்தனும் இஷ்டத்துக்கு போட்டுத் தாக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புதே என்று யோசித்த மைக்ரோசாஃப்ட், ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தர்பல்டி அடித்து, excess பணத்தை யாரும் திருப்பி தர வேண்டியதில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து விட்டது.

இது இப்படி இருக்க, 20 பேருக்கு கொடுக்க வேண்டியதை விட குறைவாக கொடுத்ததாகவும் கண்டுபிடித்து, அவர்கள் கேட்காமலேயே shortage-ஐ கொடுத்து விட்டது. இதற்காக நாம் மைக்ரோசாஃப்ட்டை பாராட்டத்தான் வேண்டும்.

இப்பவாவது பிரச்சனை தீர்ந்துதா என்கிறதை, இன்டெர்நெட்டில் நான் பார்த்த இந்த latest கமெண்ட் பார்த்து முடிவு பண்ணிக்குங்க.

”எல்லாரையும் ஒரே மாதிரி treat பண்ணனும். மத்த 1375 பேர் என்ன பாவம் பண்ணாங்க. அவங்களுக்கும் இதே excess

Firefox-க்கு program எழுதிய மைக்ரோசாஃப்ட்!.jaffnanet.blogspot.com

உங்களுக்கே தெரியும். சுதந்திர மென்பொருள் Firefox browser Search Bar-ல் default ஆக கூகிள்தான் இருக்கிறது.

Search bar-ன் down arrow-வை கிளிக் செய்து யாஹூவையோ, விக்கிபீடியாவையோ செலக்ட் செய்து கொள்ளலாம். ஆனால் வரும் மெனுவில் மைக்ரோசாஃப்டின் search engine http://www.live.com/ இருக்காது.

வேண்டுமென்றால் Address Bar-ல் live.com அடித்து அங்கே போய் தேடலாம். ஆனால் கீபோர்டு ஷார்ட்கட் Control+K பயன்படுத்தினால் cursor நேரா search bar போய் விடும் வசதி இருக்கும்போது எத்தனை பேர் மற்ற search engines போவார்கள்?

இதனால் Firefox பயன்படுத்துபவர்களில் பலர் கூகிளிலும், சிலர் யாஹூவிலும்தான் தேடுகிறார்கள்.

முதலில் அவ்வளவாக கண்டுகொள்ளாத மைக்ரோசாஃப்ட், firefox அதிக சந்தைப் பங்கு பெற்றவுடன் விழித்துக் கொண்டது.


Search engine பிசினஸ் இப்போது ஒரு prestige issue-வாக மாறி விட்டது. Market Share-க்கு ஏற்ப விளம்பர வருமானமும் அதிகரிப்பதால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை.

இப்படியே விட்டால் firefox-ல் இருந்து தன் search engine "live.com" வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமோ, என்று கவலைப்பட்ட மைக்ரோசாஃப்ட், சுலபமாக live.com வர firefox-க்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.

இதற்காக official-ஆ Microsoft Live Search add-on (extension) புரோகிராம் எழுதியது.

இதை Mozilla Link-ல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


இதை இன்ஸ்டால் செய்தவுடன், search bar down arrow-வை அழுத்தி live.com செலக்ட் செய்து கொள்ளலாம்.

இப்போ, வெறும் Control+K அடித்தால் live.com தேடல் ரெடி.


போனஸாக, கூகிள் ஸ்டைல் autosuggest-ம் வருகிறது.

யார் நினைத்து இருப்பார்கள். இப்படி firefox-க்கு மைக்ரோசாஃப்ட் addon எழுதும் என்று.

எதிரி வளர்ச்சி அடைத்தாலும், அவனது வெற்றியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பாடத்தை மைக்ரோசாஃப்டிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

இப்போ Call பண்ணலாமா? Mail பண்ணலாமா? குழப்பத்திற்கு கூகிள் தரும் தீர்வு!


ஆனந்த விகடன் blogs corner-ல் என் “ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா” லிங்க் வந்ததை பாராட்டி அன்பு நண்பர் ஹாலிவுட் பாலா எனக்கு ஜீமெயில் அனுப்பினார்.

உடனே அவர் ஆஃபீஸ் நம்பருக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவிக்கலாம் என்று நினைத்தால், ஒரு சிறு குழப்பம்.


அவர் அமெரிக்காவில் எந்த Time Zone-ல் இருக்கார்னு தெரியவில்லை. அதிலும் அவர் அலுவலகத்தில் இருக்கும் நேரத்துக்கு (9 AM to 6 PM), நம்ம ஊரு லோக்கல் டைம் என்ன இருக்கும் என கணக்கு போட சோம்பேறித்தனம்.

அதனால் நேரங்கெட்ட நேரத்தில், அவர் தூக்கத்தை கெடுக்க வேண்டாமேன்னு, safe-ஆ மெயில் மட்டும் அனுப்பி வைத்தேன்.
ஜீமெயில் உள்ளவர்களுக்கு, வெளிநாட்டு மெயில் வரும்போது இந்த மாதிரி கஷ்டம் இனிமேல் வராது.

ஜீமெயில் லேப்ஸில் ”Sender Time Zone" என்று ஒரு புது வசதி கொண்டு வந்திருக்கிறார்கள். இதை Settings--> Labs --> Sender Time Zone--> Enable செய்து விடவேண்டும்.

குறிப்பிட்ட மெயிலை பார்க்கும்போது Top-ல் இருக்கும் Show Details கிளிக் செய்தால்,

அனுப்பியவரின் ஊரில் இப்போது என்ன நேரம் என்றும், அலுவலக நேரமா என்றும் (Green Phone icon = Yes, Red Phone icon = No) விஷூவலாகவே காட்டி விடும்.

அதைப் பார்த்து நீங்க உடனே முடிவெடுக்கலாம்.

மென்பொருள் Service Packs - நமக்கு ஏன் தேவை?.jaffnanet.blogspot.com

மென்பொருள் Service Packs என்றால் என்ன?

நாம் ஏன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
தெரிந்துகொள்வதால் என்ன லாபம்?
Service Packs ஏன் தேவைப்படுகின்றன?

பதில்: பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கத்தான்!

பொதுவாக எந்த ஒரு மென்பொருளுக்கும், அதன் முதல் ரிலீசுக்குப் பிறகு patches எனப்படும் updates கொடுப்பார்கள்.


Service Pack-ல் குறிப்பிட்ட மென்பொருளில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகளை சரிசெய்வார்கள். அல்லது சில features /நம்பகத்தன்மை /பாதுகாப்பு /வேகத்தை மேம்படுத்துவார்கள்.

அந்த மென்பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட தேதி வரை வெளியாகிய updates-களை சேர்த்து ஒரே Install.exe-யாக கொடுப்பதுதான் Service pack.

எல்லா updates-ஐயும் தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரே புரோகிராமாக இருப்பது பல விதத்திலும் சௌகரியம்.


ஒவ்வொரு கணினியையும் இன்டெர்நெட்டில் கனெக்ட் செய்து தனித்தனியாக update செய்வதற்கு பதில் (நூற்றுக் கணக்கான குட்டி updates-க்கு எத்தனை reboot கேட்டு உயிரை எடுக்குமோ?), இன்டெர்நெட்டில் இருந்து ஒரே ஒரு Service pack-ஐ டவுன்லோடு செய்யலாம்.

பிறகு, நெட்வொர்க்கில் இருக்கும்/இல்லாத எல்லா கணினிகளையும், அந்த ஒரே ஃபைலை வைத்து எளிதாக அப்டேட் செய்துவிடலாம்.

Bandwidth மிச்சம்!

Service pack இன்ஸ்டால் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் பொதுவாக இல்லை. நம் விருப்பம்தான். ஆனால் பிரச்சனை வேண்டாம் என்றால் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

சில சமயம் ஒரு மென்பொருள் நிறுவும்போது குறிப்பிட்ட Service Pack இருந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும்.


பொதுவாக முதல் Service pack-ற்கு SP1 எனவும், அடுத்தடுத்த Service Packs-க்கு வரிசையாக SP2, SP3 ...என பெயரிடுவார்கள்.

Service Pack-ல் இரண்டு வகை உண்டு.

1. Incremental service pack

2. Cumulative service pack.

Cumulative service pack என்றால் மென்பொருளின் முதல் ரிலீஸ் + கடைசி Service Pack அடுத்தடுத்து போட்டால் போதும். ஏனென்றால், கடைசி Cumulative Service pack-ல் முந்தைய எல்லா Service pack-களில் இருந்த எல்லா updates-ம் சேர்க்கப்பட்டு இருக்கும்.


Incremental service pack-ல் முந்தைய கடைசி Service pack-ற்கு அப்புறம் வந்த updates மட்டுமே இருக்கும். அதனால் அவர்கள் சொல்லும் கடைசி Service pack-ஐ apply செய்த பிறகுதான், இப்போது வந்த புதிய Service pack-ஐ apply செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக, விண்டோஸ் XP SP2 (Cumulative Service Pack) இன்ஸ்டால் செய்ய XP SP1 தேவையில்லை. ஆனால் XP SP3 இன்ஸ்டால் செய்ய, முதலிலேயே XP SP1 அல்லது XP SP2 இன்ஸ்டால் ஆகி இருக்க வேண்டும்.

அந்த மாதிரியே, விண்டோஸ் Vista SP2-வை எடுத்தவுடன் apply செய்ய முடியாது. Vista SP1 apply செய்த பிறகே Vista SP2 apply செய்ய வேண்டும். ஏனென்றால் Vista SP2 ஒரு Incremental Service Pack.

சில அரைகுறையாக ரிலீஸ் ஆன Service pack போட்டு, நல்லா இருந்த கணினியும் புதிதாக பிரச்சனை கொடுத்த கதையும் உண்டு.

Service pack-ஐயும், மென்பொருளின் அடுத்த ரிலீஸையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் ஒன்றல்ல.

Service pack போட்டாலும், மென்பொருள் அதே ரிலீஸில்தான் இருக்கும்.

Service pack Status கண்டுபிடிக்க அந்தந்த மென்பொருளின் Help -> About மெனு போய்ப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களின் Service packs-க்கு இங்கே கிளிக் செய்யவும்.

பிரச்சனை உங்க பக்கமா? கூகிள் பக்கமா?.jaffnanet.blogspot.com

போன வாரம் செவ்வாய்க்கிழமை, கூகுளின் ஜீமெயில் திடீர்னு உடம்பு சரியில்லாமல் முடியாம சுமார் 3 மணி நேரம் படுத்துகிச்சி.

ஜீமெயில் பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதாலோ என்னவோ, அய்யாவுக்கு லோடு தாங்க முடியலே போல இருக்கு.


ஜென்டில்மேனா "ஸாரி" சொன்ன கூகிள், காசு கொடுத்து ஜீமெயில் பயன்படுத்துபவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக ஒத்துக்கொண்டது .

பின்னே சும்மாவா. ஜீமெயில், 99.9 சதவீதம் சேவையில் பிரச்சனை வராது. இல்லேன்னா பணம் வாபஸ்ன்னு கேரண்டி கொடுத்துதானே காசு வாங்குச்சி.

இந்த கேரண்டி “கூகிள் அப்ஸ்” (Google Apps) package-லே இருக்கும் கூகிள் கேலண்டர், கூகிள் டாக்ஸ், கூகிள் Talk போன்ற மற்றதுக்கும் பொருந்தும்.

நம்மள மாதிரி ஓசியில் ஜீமெயில் பயன்படுத்துறவங்களுக்கு refund இல்லீங்ணா! ஹிஹி!

அது மட்டும் இல்லாமே, என்னை மாதிரி ”ஜீமெயில் வரலையே, ஜீமெயில் வரலையேன்னு” கீ போர்டுலே F5 கீயே உடைஞ்சு போற அளவுக்கு அடிக்கடி refresh செய்து பார்த்தவங்க வயித்தெரிச்சலை இனிமேலாவது கொட்டிக்கக் கூடாதுன்னு ஒரு “கூகிள் சர்வீஸ் ஸ்டேடஸ் பக்கம்” ஒன்று ஆரம்பித்து இருக்கிறது.



இதுலே போய் பார்த்தால் பிரச்சனை யார் பக்கம்னு க்ளீனா தெரிஞ்சிடும். அப்புறம் எதுக்கு F5 (Refresh) க்கு கொட்டு கொட்டு.

இதுதான் சமயம்னு ”ஜீமெயில் லேப்ஸ்” கண்டுபிடிப்பான ”ஆஃப்லைன் ஜீமெயிலை” பயன்படுத்தலாமேன்னு கூகுளோட யோசனை வேறே.

அது பயன்படுத்தினால் கனக்‌ஷன் இருக்கோ இல்லியோ, மெயில் அடிச்சு outboxலே போட்டு வெச்சுக்கலாம். கனக்‌ஷன் வந்தவுடனே தானா மெயில் ஆயிடும்.

அது வேணும்னா ஜீமெயிலே Settings -> Labs போய் enable பண்ணிக்குங்க.

நல்ல, கெட்ட, விநோத IT செய்திகள்!.jaffnanet.blogspot.com

This summary is not available. Please click here to view the post.

பில் கேட்ஸ் வீட்டில் iPod, iPhone-க்கு தடை+ மற்ற IT செய்திகள்.jaffnanet.blogspot.com


1. உலகமே விருப்பத்துடன் பயன்படுத்தும் ஆப்பிளின் ஐபோட்(iPod), ஐஃபோன்(iPhone) மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பசங்க (2 பெண்கள், ஒரு பையன்) ஆசைப்பட்டு கேட்டாகூட கிடையாது.

இதை நான் சொல்லலைங்க! பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸே Vogue பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க!

தன் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருக்கும் ஐஃபோன்களை திருமதி. பில் கேட்ஸ் பார்த்துட்டு, நமக்குன்னு ஒன்னு இல்லையே என்று ரொம்பத்தான் ஏங்கிப் போய் கிடக்கறாங்க.

2. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது. IE8-ல் மட்டுமே தெரியும் மாதிரி ஒரு web page-ஐ உருவாக்கி மறைத்து வைத்துள்ளது.


Twitter-ல் அது தொடர்ந்து தரும் clue-க்களை வைத்து அந்த webpage-ஐ முதலில் கண்டுபிடிப்பவருக்கே அந்த $10,000 சொந்தம். 19 ஜூனில் இருந்து அந்த போட்டி நடந்துகொண்டு இருக்கிறது.

மேற்கொண்டு விவரங்களுக்கு http://www.tengrandisburiedhere.com/ பாருங்கள்.

“சொக்கா! இந்த பரிசு எனக்கில்லே. எனக்கில்லே.”


3. ஒரு ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பேர், கம்பெனி கொடுத்த லாப்டாப்பை அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போட (sincerely) பயன்படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


4. இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். விலை குறைந்து போச்சுன்னு டபுள் டிஜிட் மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா வாங்கி நாம இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் இதில் சேர்த்தி.


5. இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


6. Redhat ஸ்பான்சர் செய்யும் ஃபெடோரா(Fedora) லினக்ஸ் புதியதாக Fedora 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20 நொடியில் booting ஆக முயற்சிப்பது, default ஃபைல் சிஸ்டமாக புதிய ext4, ஓப்பன் ஆபீஸ் 3.1, KDE 4.2.2 ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில சிறப்பு அம்சங்கள். செல்லப் பெயர் Leonidas.

7. V1*GRA வாங்கலியோ.. இப்படி இதை வாங்கு. அதை வாங்குன்னு அழையா விருந்தாளியா வந்து தொல்லை கொடுக்கும் குப்பை ஈமெயில்களைத்தான் Spam என்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் தன் அறிக்கையில் உலகின் மொத்த ஈமெயிலில் 97 சதவீதம் spam என்று சொல்கிறது. அவ்வளவு ஒன்னும் என் inbox-க்கு வரலியேன்னா அதுவும் சரிதான். Mail server-லியே Spam filter வைத்து அதிகபட்சம்