எனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன்.
சென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.
பிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.
மேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.
இதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது. மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல் கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்) அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
எனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா? என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன் License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.
ரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வந்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும், கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.
ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க.. Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..
நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...

No comments:
Post a Comment