கணினியில் நாம் திறக்கும் கோப்புகளின்
(Word Document, Picture files etc.,) History - Start மெனுவில் My Recent
Documents - ல் சேர்க்கப்படும்.
இது
தேவையில்லையெனில், ஒவ்வொரு முறையும்
ஹிஸ்டரியை க்ளியர் செய்யவேண்டியிருக்கிறது.
ஒரு சில சமயங்களில் க்ளியர்
செய்ய மறந்துபோய், வேறு யாராவது,
நாம் எந்த எந்த கோப்பை
திறந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவார்களோ,
என்ற கிலியுடன் திரிவதும், யாராவது
பார்த்துவிட்டால், தலை கைவைத்து
அமர்வதும் எப்பொழுதாவது நிகழும்.
இந்த
ஹிஸ்டரியை Disable செய்ய என்ன செய்யலாம்?
இந்த
வழியை உபயோகித்து, பலன் இருக்கிறதா
என்று பாருங்கள்.
Start க்கு
சென்று Run -ல் Gpedit.msc என டைப்
செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது
'Group Policy' என்ற விண்டோ திறக்கும்.
இதில்
User
Configuration
Administrative Templates
Start menu and Taskbar - ல்
க்ளிக் செய்து வலதுபுறமுள்ள டேபில்,
Do
not keep history of recently opened documents -ல் இரட்டை
க்ளிக் செய்து இதில் திறக்கும் டயலாக் பாக்ஸில்
Enabled ஐ தேர்வு செய்து ஒகே
கொடுங்கள்.
அல்லது.
Clear
history of recently opened documents on exit -ல் இரட்டை
க்ளிக் செய்து இதில்
Enabled ஐ தேர்வு
செய்யுங்கள்.
அவ்ளோதான்.
Windows
Tricks - How to disable recent documents history.
No comments:
Post a Comment