Tuesday, November 2, 2010

Recent Documents -ஐ Disable செய்ய..,.jaffnanet.blogspot.com

கணினியில் நாம் திறக்கும் கோப்புகளின் (Word Document, Picture files etc.,) History - Start மெனுவில் My Recent Documents - ல் சேர்க்கப்படும்.

இது தேவையில்லையெனில், ஒவ்வொரு முறையும் ஹிஸ்டரியை க்ளியர் செய்யவேண்டியிருக்கிறது. ஒரு சில சமயங்களில் க்ளியர் செய்ய மறந்துபோய், வேறு யாராவது, நாம் எந்த எந்த கோப்பை திறந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவார்களோ, என்ற கிலியுடன் திரிவதும், யாராவது பார்த்துவிட்டால், தலை கைவைத்து அமர்வதும் எப்பொழுதாவது நிகழும்.

இந்த ஹிஸ்டரியை Disable செய்ய என்ன செய்யலாம்?

இந்த வழியை உபயோகித்து, பலன் இருக்கிறதா என்று பாருங்கள்.

Start க்கு சென்று Run -ல் Gpedit.msc என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற விண்டோ திறக்கும். இதில்


User Configuration
Administrative Templates
Start menu and Taskbar - ல் க்ளிக் செய்து வலதுபுறமுள்ள டேபில்,

Do not keep history of recently opened documents -ல் இரட்டை க்ளிக் செய்து இதில்
திறக்கும் டயலாக் பாக்ஸில் Enabled தேர்வு செய்து ஒகே கொடுங்கள்.

அல்லது.

Clear history of recently opened documents on exit -ல் இரட்டை க்ளிக் செய்து இதில்
Enabled தேர்வு செய்யுங்கள்.

அவ்ளோதான்.

Windows Tricks - How to disable recent documents history.

Microsoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி..,.jaffnanet.blogspot.com

வழக்கமாக Word கோப்பை PDF கோப்பாக மாற்றுவதற்கு Adobe Acrobat Professional அல்லது வேறு ஏதாவது 3rd party மென்பொருள்கள் தேவைப்படும்.

ஆனால் மைக்ரோசாப்ட் Office 2007 - மென்பொருள் தொகுப்பை உபயோகிப்பவர்கள், Word Document ஐ மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருட்களும் இல்லாமல் PDF ஆக மாற்றுவதற்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து Microsoft Add-in தரவிறக்கம் செய்து, பதிந்து கொண்டால் மிகவும் எளிதாக மாற்றலாம்.



Convert Word Document to PDF without Adobe Acrobat Software.

நோக்கியா மொபைல் ட்ரிக்ஸ்.jaffnanet.blogspot.com

By pressing x + # (where x is any number) will show the telephone number stored in that particular location.
For example, pressing 125 in idle mode and then pressing "#" later, will show the 125th number stored when the number are entered in your phone-book.

*3370#Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370#Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370# ( Favourite )
*#4720#Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720#Deactivate Half Rate Codec.
*#0000#Displays your phones software version,1st Line : Software Version,2nd Line : Software Release Date,3rd Line : Compression Type. ( Favourite )
*#9999#Phones software version if *#0000# does not work.
*#06#For checking the International Mobile Equipment Identity (IMEI Number). ( Favourite )
#pw+1234567890+1#Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+2#Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols).
#pw+1234567890+3#Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4#SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w"and "+" symbols).
*#147#(vodafone) this lets you know who called you last.
*#1471#Last call (Only vodofone).
*#21#Allows you to check the number that "All Calls" are diverted to
*#2640#Displays security code in use.
*#30#Lets you see the private number.
*#43#Allows you to check the "Call Waiting" status of your phone.
*#61#Allows you to check the number that "On No Reply" calls are diverted to.
*#62#Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to.
*#67#Allows you to check the number that "On Busy Calls" are diverted to.
*#67705646#Removes operator logo on 3310 & 3330.*#73#Reset phone timers and game scores.
*#746025625#Displays the SIM Clock status, if your phone supports this power saving feature"SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible.
*#7760#Manufactures code.
*#7780#Restore factory settings.
*#8110#Software version for the nokia 8110.
*#92702689#Displays -1.Serial Number,2.Date Made,3.Purchase Date,4.Date of last repair (0000 for no repairs),5.Transfer User Data.To exit this mode you need to switch your phone off then on again. ( Favourite )
*#94870345123456789#Deactivate the PWM-Mem.
**21*number#Turn on "All Calls" diverting to the phone number entered.
**61*number#Turn on "No Reply" diverting to the phone number entered.
**67*number#Turn on "On Busy" diverting to the phone number entered.

பிளாக்கரில் MP3 ஐ பதிவேற்றம் செய்ய..,.jaffnanet.blogspot.com

வழக்கமாக பிளாக்கரில், படங்கள் மற்றும் காணொளி யை இணைக்க வழிவகை உண்டு. ஆனால் ஒரு MP3- ஐ இணைக்க அந்த கோப்பை WMV கோப்பாக மாற்ற வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.

முதலில் இதை செய்வதற்கு உங்கள் கணினியில் Windows Movie Maker மென்பொருள் இருக்க வேண்டும். இந்த மென்பொருள் வழக்கமாக Windows XP Service Pack 2 வுடன் வரும். ஒருவேளை உங்கள் கணினியில் 'Windows Movie Maker' இல்லையென்றால் இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

விண்டோஸ் மூவி மேக்கர் - ஐ திறந்து கொண்டு அதில் 'File -> Import into Collections' சென்று எதாவது விருப்பப்பட்ட ஒரு 'JPG' கோப்பை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு 'Collections' டேபில் தெரியும், அதை டிராக் செய்து கீழே உள்ள வீடியோ ட்ராக்கில் டிராப் செய்யவும்.
பிறகு எந்த MP3 கோப்பை WMV ஆக மாற்ற வேண்டுமோ அந்த கோப்பை மறுபடியும் 'Import into Collections' சென்று தேர்ந்தெடுத்து கீழே உள்ள ' Audio/Music Track' ல் ட்ராக் அன்டு டிராப் செய்து கொள்ளவும். பிறகு இந்த கோப்பை சேமித்துக் கொண்டு, பிளாக்கரில் 'Add Video' -ல் மிகவும் எளிதாக பதிவேற்றம் செய்து விடலாம்.

பாகம்-2 ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி.jaffnanet.blogspot.com

ஃபயர் ஃபாக்ஸில் எந்த விதமான Streaming வீடியோவையும் டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்த்தோம்



முதல் பதிவை படிக்காதவர்கள் கீழ்கண்ட தளத்திற்கு செல்லவும்.,

http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html

இப்படி டவுன்லோடு செய்த ஃபைலுக்கு வழக்கமாக Extension இருக்காது. நீங்களே அதை Rename செய்து .FLV என கொடுத்துவிடுங்கள்.


இப்படி டவுன்லோடு செய்த வீடியோவை கணினியில் மட்டும் தானே பார்க்கமுடியும்.
AVI ஆக மாற்றி அதை Nero போன்ற மென்பொருள் மூலமாக ஒரு VCD ஆகவோ அல்லது DVD ஆகவோ மாற்ற முடியுமா?
உங்கள் மொபைல் போனில் அல்லது ஐபாடில் பதிய முடியுமா?

முடியும்! அதுவும் ஒரு 100% இலவச மென்பொருளைக்கொண்டு ..,

கீழ்கண்ட தளத்திலிருந்து MediaCoder 0.7.0 RC 3 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://www.freewarefiles.com/MediaCoder_program_18085.html




இந்த மென்பொருள் மூலம் மேற்சொன்ன அனைத்தும் சாத்தியமே..,

Wednesday 8 April 2009

ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி




Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )


ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390

(ஒரு வேளை 'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து தேடவும்)


நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல் Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ கிளிக் செய்யவும்.

அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.
பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.
'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.


Monday 6 April 2009

ஃபோட்டோ ஃபன்னியா !...,


உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களுக்கு வித்தியாசமான 'Effect' களை கொடுக்க 'Photoshop' போய் மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் கீழ்கண்ட இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.

http://www.photofunia.com/
'Photofunia' என்பது ஒரு ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டிங் உபகரணமாகும். உங்கள் புகைப்படத்தை 'Upload' செய்தால் இதில் உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை மட்டும் அதுவாகவே கண்டறிந்து, 100 க்கும் மேற்பட்ட 'Effect' களில் உங்கள் புகைப்படத்தை மெருகூட்டுகிறது.
கண்ணைக் கவரும் Effect- கள்.., ரூபாய் நாணயம், ஹோர்டிங்க்ஸ், தரை ஓவியம், தொலைக்காட்சி, சுவரோவியம், செய்தித்தாள், டீசர்ட், மோனாலிஸா இப்படி நிறைய...,

போய்தான் பாருங்களேன்..

இலவச இயக்கி (Operating system) உங்களுக்காக..,.jaffnanet.blogspot.com

விண்டோஸ் எக்ஸ்பி, உபுந்து, விஸ்டா போன்ற இயக்கிகளில் தினமும்வேலை செய்து அலுத்து போனவர்களுக்காக இந்த இயக்கி உங்களுக்காக முற்றிலும் இலவசம் ..,

இதில் அனைத்து Option களையும் உபயோகித்துப் பாருங்கள்..,

வேடிக்கை!...






I was wondering if anybody has tried www.AlexaAutoSurf.com and if so are they any good?... they look good on paper, but I am still waiting for one of my websites to get approved...


YES real visitors visit your site but most of them they are not a their pc since the changing of sites is automatic. If you want good TARGETED traffic , autosurf is not for you but these kind of programs are

USB ட்ரைவை விண்டோஸ் எக்ஸ்பி துவக்குவதற்கான ஒரு சாவியாக உபயோகப்படுத்த ஒரு டிப்ஸ்.jaffnanet.blogspot.com

சமீப காலமாக விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும் கணினி தாய் பலகைகளில் (Mother Board) USB Booting feature வருகிறது. இதை பயன்படுத்தி கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி நேரடியாக துவங்காமல் உங்கள் USB டிரைவை ஒரு 'Key' ஆக பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அதாவது உங்கள் 'USB Drive' இல்லாமல் உங்கள் கணினி பூட் ஆகாது.


ஒரு முன் எச்சரிக்கையாக விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டாலேஷன் சிடியை அருகில் வைத்துக் கொள்ளவும்.
தேவையான USB டிரைவ் குறைந்தபட்சம் 512 எம்பி கொண்டதாக இருக்கவேண்டும்.

"USB Disk Storage Format Tool" என்ற பயன்பாட்டு நிரலை கீழ்கண்ட தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.pctipp.ch/downloads/dl/32594.asp

http://snipurl.com/tacdec


இதில் டிவைஸில் உங்கள் USB டிரைவை தேர்ந்தெடுத்து, ஃபைல் சிஸ்டத்தில் 'FAT' தேர்ந்தெடுத்து வால்யூம் லேபிள் (11 உருக்கள்) ஏதாவது கொடுத்து ஸ்டார்ட் கொடுக்கவும். (கவனம்: - 'USB' டிரைவில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும்)

மை கம்ப்யூட்டரை திறந்து, Tools -> Folder Options -> View -> Show hidden Files and Folders -> Hide protected operating system files என்பதை டிஆக்டிவேட் செய்யவும்.

உங்கள் கணினியின் சிஸ்டம் டிரைவிற்கு சென்று (எந்த டிரைவில் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கிறதோ அந்த டிரைவ்,உதாரணத்திற்கு ' C:' என வைத்துக் கொள்வோம்) ரூட் டைரக்டரியில் உள்ள 'boot.ini, ntldr, NTDETECT.COM ' ஆகிய ஃபைல்களை 'USB' டிரைவிற்கு காப்பி செய்து கொள்ளவும்.

'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.INI' என்ற ஃபைலை 'BOOT.BAK ' என 'RENAME' செய்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி ஹார்ட் டிரைவிலிருந்து பூட் ஆகாது. அதே சமயம் உங்கள் 'USB' டிரைவ் உங்கள் கணினியின் இயங்குதளத்தை திறக்கும் சாவியாக மாற்றப்பட்டுள்ளது.

இனி சோதித்து பார்க்கலாம்..,
உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து 'BIOS' இற்குள் சென்று 'USB' டிரைவை 'FIRST BOOT DEVICE' ஆக மாற்றிக்கொள்ளவும், 'QUICK BOOT' ஐயும் 'SHOW FULL SCREEN LOGO' ஐயும் முடக்கி (DISABLE), 'USB LEGACY SUPPORT' மற்றும் 'USB 2.0 CONTROLLER' ஆகியவைகள் இருந்தால் அவைகளை ஆக்டிவேட் செய்து சேமித்து 'BIOS' லிருந்து வெளிவரவும்.


இப்பொழுது உங்கள் கணினி 'USB' டிரைவில் பூட் ஆகும்.
ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் 'USB' ட்ரைவின் ரெஸ்பான்ஸ் டைமை 'BIOS' ல் அதிகரிக்கும் வழி உள்ளதா என பார்க்கவும், உதாரணமாக, 'USB MASS STORAGE RESET DELAY' அதில் உள்ள அதிகபட்ச மதிப்பை தேர்ந்தெடுக்கவும்.

என்ன 'USB' டிரைவில் பூட் ஆகிவிட்டதா?

ஏதாவது சிரமம் ஏற்பட்டால் பின்னூட்டம் இடவும்.

மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற...,
'USB' ல் பூட் ஆகி விண்டோஸ் வேலை செய்தால், 'C:\' ட்ரைவில் உள்ள 'BOOT.BAK' என்ற ஃபைலை 'BOOT.INI' என 'RENAME' செய்து கொள்ளுங்கள்.

'USB' ல் பூட் ஆகவில்லையெனில், 'BIOS' ல் 'FIRST BOOT DEVICE' டிவைஸை உங்கள் சிடி ட்ரைவாக தேர்வு செய்து கொள்ளவும். விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் சிடியை உபயோகித்து பூட் செய்து இன்ஸ்டாலேஷன் விஸார்டில் ரிப்பேர் என கொடுத்து, அதில் வரும் டாஸ் பிராம்ப்டில் 'REN C:\BOOT.BAK C:\BOOT.INI' என கொடுத்து ரீ-ஸ்டார்ட் செய்யவும்.

ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,.jaffnanet.blogspot.com

டிப் - ஒன்று

ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,

அந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.

அவ்ளோதான்.

கொசுறு:-
உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)

டிப் -இரண்டு
விண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.
இந்த நாயை துரத்த என்னவழி?

'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.

'Change Preferences -> Without an animated screen character'

என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?

பவர்பாயிண்ட் ட்ரிக்ஸ்.jaffnanet.blogspot.com

1. திரைப்படங்களின் இறுதியில் வரும் ஸ்க்ரோலிங் கிரிடிட்ஸ் போல பவர்பாயிண்டில் டெக்ஸ்ட் அனிமேஷன்

டெக்ஸ்ட் பாக்ஸில் டெக்ஸ்டை டைப் செய்து கொள்ளுங்கள்.
அந்த டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும். அதில் Add Effect -> Entrance -> Fly in தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது அந்த எஃபெக்ட் கீழே உள்ள கட்டத்தில் வந்திருக்கும். அதில் ரைட்கிளிக் செய்து Effect Options -> Text Animation -> Group Text -ல் 'One Object ' கொடுத்து விட்டு பிரிவ்யூ பாருங்கள்.

மறுபடியும் அதே டெக்ஸ்ட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 'Custom animation ' செல்லவும் அதில் Add Effect -> Exit -> Fly out தேர்ந்தெடுக்கவும். ' Options' ல் உள்ள 'Speed ஃபீல்டில் Very Slow என்பதையும், 'Direction' ஃபீல்டில் To Top என்பதையும் தேர்வு செய்யவும்.

கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தி பார்க்கவும்..,

2. நீங்கள் எடிட் செய்து கொண்டிருக்கும் ஸ்லைடிலிருந்து ஸ்லைடு ஷோவை துவக்க..,

உங்கள் பிரசன்டேஷனில் 50 ஸ்லைடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 46 வது ஸ்லைடில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது ஸ்லைடு ஷோ கிளிக் செய்தால் முதலாவது ஸ்லைடிலிருந்துதான் ஸ்லைடு ஷோ துவங்கும். ஆனால் 46 வது ஸ்லைடிலிருந்து துவக்க Shift+F5 முயற்சித்துப் பாருங்கள்..,

3. சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ
வழக்கமாக ஸ்லைடு ஷோ முழு திரையில் வரும். சில சமயங்களில், இடையில் ஏதாவது ஸ்லைடில் எடிட் செய்ய வேண்டியிருந்தால், ஸ்லைடு ஷோவை நிறுத்தி (எஸ்கேப் கீயை மாங்கு, மாங்கென்று அடித்து) மறுபடி வரவேண்டும்.

இதற்கு மாற்று வழியாக 'Ctrl' யை பிடித்துக் கொண்டு இடது புறம் கீழே உள்ள ஸ்லைடு ஷோ பட்டனை கிளிக்கி பாருங்கள். ஒரு சிறிய விண்டோவில் ஸ்லைடு ஷோ வரும். மிகவும் எளிதாக ப்ரசன்டேஷனுக்கும், ஷோவுக்கும் மாறிக்கொள்ளலாம்.

தீமை மாத்து! என்ஜாய் பண்ணு!.jaffnanet.blogspot.com

ஒரே மாதிரியாக ஃபயர் ஃபாக்ஸை பார்த்து பார்த்து போரடிக்கிறதா உங்களுக்கு, ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமாய் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

கீழே உள்ள சுட்டியில் கிளிக்கி, இந்த ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியை நிறுவி, விருப்பபட்ட தீமை தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/search?q=&cat=2%2C0


பிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வது எப்படி ?.jaffnanet.blogspot.com

sites.google.com சென்று உங்களுக்கென்று ஒரு வலைத்தளத்தை நிறுவிக்கொள்ளுங்கள்.
நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் 'SWF' கோப்பை ' Attach' செய்து விடுங்கள். அப்லோடு ஆன பிறகு அந்த கோப்பில் மௌசின் வலது பொத்தானை அழுத்தி 'Copy Link Location' சேமித்துக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து, புதிய இடுகையில் 'New Post ' ல் 'Edit Html' சென்று கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்.





இதில் 'Yourfile.swf' என்பதற்கு பதிலாக காப்பி செய்த லிங்க் லொகேஷனை பேஸ்ட் செய்யவும்.

அவ்ளோதான்

IE - இன் தோற்றத்தை உங்கள் விருப்பத்திற்கு மாற்றுங்கள்.jaffnanet.blogspot.com

Start சென்று 'Run' ல் 'gpedit.msc' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இப்பொழுது 'Group Policy' என்ற புதிய விண்டோ திறக்கும். இதில்,


'User Configuration ->
Windows Settings ->
Internet Explorer Maintenance ->
Browser User Interface'

சென்றால் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
Browser Title
Custom Logo
Browser Toolbar Customizations



இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி டைட்டில், லோகோ பிட் மேப்ஸ், அனிமேட்டட் பிட் மேப்ஸ், டூல் பார் கஸ்டமைசேஷன் என 'IE' இன் தோற்றத்தை மாற்றி பயன் பெறுங்கள்

Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,

சிலசமயம் நாம் தவறுதலாக 'Quick Launch Bar' -ல் உள்ள 'Show Desktop' ஐகானை டெலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.

நோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop


இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை 'All Files' என்பதை தேர்வு செய்து, 'Show Desktop.scf' எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். ('Show Desktop.scf.txt' என்ற பெயரில் 'save' ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை 'Quick Launch bar' க்கு டிராக் செய்து விடவும்.

வழி இரண்டு

'Start -> Run' க்கு சென்று 'regsvr32 /n /i:U shell32.dll' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை 'Show Desktop' ஐகானை திரும்ப கொடுக்கும்

Invisible Folder - லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு..jaffnanet.blogspot.com

Invisible Folder - எப்படி உருவாக்குவது என்பதைபற்றி என்னுடைய முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.


லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கு.. லேப்டாபில் 'Numeric Key pad' இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லையோ என்ற ஐயத்தை களையவே இந்தபதிவு.

Invisible Folder - எப்படி உருவாக்குவது என்பதைபற்றி கிழ்கண்ட லிங்கில்படித்துவிட்டு பிறகு இதை தொடரவும்.


http://suryakannan.blogspot.com/2009/03/invisble-folder.html
Start->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும்.

தேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக்செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும்.

Invisible Drive ஐ உருவாக்க ...,.jaffnanet.blogspot.com

ஒரு குறிப்பிட்ட டிரைவை My Computer லிருந்து மறைய வைக்க ஒரு டிரிக்..,


Start சென்று Run -ல் 'Regedit ' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இதில் கீழ்கண்ட லொகேஷனுக்கு செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

அதில் 'Explorer' ல் ரைட் பட்டன் கிளிக் செய்து New மற்றும் "DWORD Value" ஐ தேர்வு செய்து அதற்கு 'NoDrives' என பெயரிடவும்.


பிறகு NoDrive ஐ இரண்டு முறை கிளிக் செய்து, அதனுடைய Properties ல் 'Base Unit ல் Decimal ஐ தேர்வு செய்யவும்.


பிறகு எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனுடைய வேல்யூவை கொடுக்கவும்.

A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
H: 128
I: 256
J: 512
K: 1024
L: 2048
M: 4096
N: 8192
O: 16384
P: 32768
Q: 65536
R: 131072

S: 262144
T: 524288
U: 1048576
V: 2097152
W: 4194304
X: 8388608
Y: 16777216
Z: 33554432
All: 67108863

நீங்கள் உங்களுடைய 'E' டிரைவை மறைக்க விரும்பினால் வேல்யூ - 16 என்று கொடுக்கலாம். இதில் சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ் களை மறைக்க வேண்டுமெனில் அதனுடைய மதிப்பை மட்டும் கூட்டினால் போதுமானது. உதாரணமாக 'E' ஐயும் 'G' டிரைவையும் மறைக்க மதிப்பு -80, அதாவது 64+16.


இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். அவ்ளோதான்!

உங்கள் டிரைவ் மறைந்து விடும்.
மறுபடியும் தோன்ற வைக்க Registry -ல் அந்த குறிப்பிட்ட Key Value ஐ 0 ஆக மாற்றினாலோ அல்லது அந்த Key ஐ Delete செய்தாலோ போதுமானது.

குறிப்பு:

உங்கள் 'C' (System Drive) டிரைவை மறைக்க முடியாது




Sunday 22 March 2009

அறிவிப்பு பகுதியில் உங்கள் பெயரை வரவைக்க வேண்டுமா?


விண்டோசில் டாஸ்க் பாரில் உள்ள அறிவிப்பு பகுதியில் (Notification Area) எப்பொழுதும் நீங்கள் விரும்பும் பெயரை வரவைக்க..,

Control Panel -> Regional and Language Options -> Customize -> Time சென்று AM Symbol, PM Symbol என்ற கட்டங்களில் தேவையான டெக்ஸ்டை டைப் செய்து Time Format= hh:mm:ss tt என மாற்றி Apply & OK கொடுத்தால் போதும்

Windows Media Player -ல் Screenshot எடுக்க..,.jaffnanet.blogspot.com

ஒரு ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?

வழி இருக்கிறது (DOS Prompt ல் எளிதாக செய்யலாம்) விண்டோஸில் இதனை எளிதாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

சிறு தவறுகள் வரலாம் முக்கியமாக எக்ஸ்போளரரில், அதற்கும் ஒரு ரெஜிஸ்டரி எடிட் வழியையும் தந்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொண்டும், ஐடியா இருந்தால் தயவுசெய்தும் பின்னூட்டம் இடவும்.

சிறிய ஃபோல்டராக இருந்தால், போல்டரை திறந்து ஒவ்வொன்றாக பார்த்து எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை நூற்றுக்கணக்கில் கோப்புகளை வைத்திருந்தால் (எம்பி3 பாடல்கள்) என்ன செய்வது?

நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அதில் டைப் செய்யவும்,

@echo off
dir %1 /o /b :g>c:\filelist.txt
start/w notepad c:\filelist.txt
exit


பின் அதனை C டிரைவில் 'C:\Dir_List.bat
என்ற பெயரிலோ அல்லது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு பெயரையோ வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது இந்த பேட்ச் 'Batch' பைல் நமக்கு தேவையான வேலையை செய்யும். இதை நாம் மவுஸை ரைட் கிளிக் செய்தால் வரும் 'Context Menu' மெனுவில் கொண்டுவருவது எப்படி என்பதை பார்ப்போம்.

Windows Explorer/My computer - திறந்து அதில் Tools > Folder Options > File Types. க்கு சென்று 'File Folder' என்ற file type - செலக்ட் செய்து, பிறகு Advanced button -ல் கிளிக் செய்து அதில் வலப்புறமாக உள்ள New பட்டன் - கிளிக் செய்து அதில் , Action Field = 'Folder Contents' எனவும் 'Application to be used to perform this action' field -ல் C:\Dir_List.bat கொடுத்து OK மூன்று முறை கிளிக் செய்து க்ளோஸ் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஃபோல்டரை ஓபன் செய்து பார்க்கவும். சில சமயங்களில் 'Open With' என்று வந்தாலும் வரலாம்.

இதை சரி செய்ய Registry Editor - திறந்து அதில்
HKEY_CLASSES_ROOT\Directory\shell\. இன் default value Explorer என மாற்றிக்கொண்டு கணினியை Restart செய்யவும்.

இனி எந்த ஃபோல்டரில் உள்ள Contents வேண்டுமோ, அந்த ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து அதில் 'Folder Contents' கிளிக் செய்து பாருங்கள்.