Tuesday, November 2, 2010

ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,.jaffnanet.blogspot.com

டிப் - ஒன்று

ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,

அந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.

அவ்ளோதான்.

கொசுறு:-
உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)

டிப் -இரண்டு
விண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.
இந்த நாயை துரத்த என்னவழி?

'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.

'Change Preferences -> Without an animated screen character'

என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?

No comments:

Post a Comment