வழக்கமாக நாம் வலைபக்கங்களிலிருந்து,
அல்லது வேறு ஏதாவது டாக்குமெண்டிலிருந்து, தேவையான டெக்ஸ்டை காப்பி செய்து
மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் பேஸ்ட் செய்வது வழக்கம். இவ்வாறு பேஸ்ட்
செய்யும் பொழுது, அந்த டாக்குமெண்டில் அல்லது வலைப்பக்கத்தில் உள்ள
டெக்ஸ்ட் மட்டுமின்றி அதனுடைய ஃபார்மேட்டிங் மற்றும் ஹைபர் லிங்குகள்
அனைத்தும் பேஸ்ட் ஆகி நம்மை டென்ஷாக்கிவிடுவது வாடிக்கை.
நமது மைக்ரோசாப்ட் வேர்டு 2007
தொகுப்பில், பேஸ்ட் செய்தவுடன் அதன் கீழே உள்ள சிறு பேஸ்ட் ஐகானை நம்மில்
பலரும் கவனிக்க தவறிவிட்டு, மறுபடியும் டெக்ஸ்டை ஃபார்மேட் செய்ய
ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஐகான் நமக்கு என்ன சொல்லுகிறது? இந்த ஐகான்
எதற்காக?
இந்த ஐகானில் அடங்கியிருக்கிறது சூட்சுமம். அந்த ஐகானில் க்ளிக்
செய்து பாருங்கள்.
க்ளிக் செய்தவுடன் திறக்கும் சிறிய Context menu வில் Keep Text
Only என்ற வசதியை க்ளிக் செய்தவுடன். நாம் பேஸ்ட் செய்திருந்த டெக்ஸ்டில்
இருந்த ஃபார்மேட்டிங் அனைத்தும் (Hyperlink உட்பட) நீக்கப்பட்டு, வெறும்
டெக்ஸ்ட் மட்டும் கிடைத்துவிடும்.
இது எப்படி இருக்கு?...
சரி! இப்பொழுது அடுத்த பிரச்சனையை
பார்ப்போம். இவ்வாறு நாம் வலைப்பக்கங்களிலிருந்து (விக்கிபீடியா போன்ற
தளங்களிலிருந்து) அதிகப்படியான விவரங்களை காப்பி செய்து வேர்டு
டாக்குமெண்டில் பேஸ்ட் செய்யும் பொழுது, சில சமயங்களில் மொத்த கணினியே ஹேங்
ஆனது போல செயலிழந்து விடுவதை கவனித்திருக்கிறோம்.
இது போன்ற நிகழ்வுகள், அந்த
டெக்ஸ்டுடன் அதன் வடிவமைப்பு, ஃபார்மேட்டிங் என அனைத்துமே பேஸ்ட் ஆவதற்கு
எடுத்துக் கொள்ளும் நேரமே முக்கிய காரணமாகும். இதனை மேலே சொன்ன வழிமுறையில்
தீர்வு காண இயலாது. ஏனெனில், மேலே சொன்ன வழிமுறை பேஸ்ட் ஆனதற்கு பிறகு
நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகும்.
நாம் எதிலிருந்து காப்பி செய்து,
வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்தாலும், அதில் வெறும் ப்ளைன் டெக்ஸ்ட்
மட்டுமே பேஸ்ட் ஆகும்படி வேர்டு தொகுப்பில் நாம் மாற்றத்தை உருவாக்க
இயலும்.
உங்கள் வேர்டு தொகுப்பில், Office
button ஐ அழுத்தி Word Options பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் இடது புற
பேனில் உள்ள Advanced பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது வலதுபுற பேனில்
Cut, Copy and Paste பகுதிக்கு சென்று, Pasting from other programs
என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Keep text only என்பதை தேர்வு செய்து
Apply செய்தால் போதுமானது.
இது எப்படி இருக்கு?..
No comments:
Post a Comment