நமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான
ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில்
பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை
தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type
மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண
முடியும்.
ஆனால் இந்த column
களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள்
அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால்
கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று
சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில்
க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி
கொள்கிறோம்.
இப்படி ஒவ்வொரு column
த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட்
உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை
ஒரு சேர அழுத்தவும்.
இப்பொழுது column கள்
ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை
மாற்றிக்கொள்ளும்.
இதற்கெல்லாம் ஒரு இடுகையா? என்று
கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.
.
No comments:
Post a Comment