ஒரு சிலரது கணினி டெஸ்க்டாப்பில்,
வால்பேப்பரே தெரியாத அளவிற்கு கோப்புகளும், ஃபோல்டர்களும், ஷார்ட்கட்களும்
நிறைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படி டெஸ்க்டாப்பில் தேடி
உடனடியாக ஒரு பயன்பாட்டின் ஷார்ட்கட்டையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வேர்டு
கோப்பையோ திறப்பார்கள் என்பது அருகில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.
சரி! இவர்களுக்கு பயன்படும் வகையிலும்,
அடிக்கடி உபயோகிக்கும்
அப்ளிகேஷன்கள், உலாவிகள், கருவிகளை இன்னும் விரைவாக செயல்படுத்த ஏதாவது
ஒழுங்கு படுத்தப்பட்ட வழிமுறை உண்டா? என யோசிப்பவர்களுக்கு பயன்படும்
வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender!
(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை கணினியில் நிறுவிக்கொண்டு,
முதலில் இதனை செயல் படுத்துவதற்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக்
கொள்ளுங்கள்.
பிறகு இந்த கருவியை இயக்கி, நாம்
அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகள், உலாவிகள், அல்லது கோப்புகளை இதில்
ட்ராக் அண்டு ட்ராப் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இதில் இணைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றபடி Group களை
உருவாக்கி அவற்றுள்ளும் இணைத்துக் கொள்ளலாம்.
அத்தோடு,
தற்பொழுது, இயக்கத்திலிருக்கும் பயன்பாடுகளையும் இணைக்கும் வசதி
இதிலுண்டு.
இந்த கருவியில் இவை
மட்டுமின்றி அடிக்கடி உபயோகிக்கும் url ஐயும் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும்
இதிலுள்ள ஒரு சிறந்த பயன்பாடு என்னவெனில், நீங்கள் ஏதாவது தரவிறக்கம்
செய்து கொண்டிருக்கிறீர்கள், அல்லது DVD பர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள்,
உறக்கம் வேறு வருகிறது, இது முடியும் வரை காத்திருக்க முடியாது, என்று
நினைக்கும் பொழுது, இந்த கருவியை பயன் படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு
(ஒரு நாள் வரையிலும் கூட) பிறகு கணினியை shut down / hibernate/ sleep
வசதியை ஏற்படுத்திக் கொண்டு தூங்க செல்லலாம்.
இணைக்கப்பட்ட ஐகான்களை
இதில் ட்ராக் அண்ட் ட்ரோப் செய்து வரிசை முறையை மாற்றியமைக்கலாம்.
Mouse Extender தரவிறக்க!
No comments:
Post a Comment