கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக இ-மெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.
இந்த பாஸ்வேர்ட்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் என்ன என்று ஆராயப்பட்டது.
இதில் `123456′ என்ற எண்கள் தான் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஸ்வேர்ட் என்ற பெயரே அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தங்களது முதல் பெயர் மற்றும் ஒரே சொல்லை பலமுறை பயன்படுத்துவது ஆகியவையும் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்துகின்றனர்.
`பாண்ட்007′, `கோகோகோலா’ போன்ற சொற்கள் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள பாஸ்வேர்ட்களை ஒன்பதில் ஒருவரும், முதல் இருபது இடங்களில் உள்ள பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளவற்றை 50ல் ஒருவரும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு நபர் அதிக பட்சமாக 15 பாஸ்வேர்ட்கள் வரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்றும், 61 சதவிகிதம் பேர் பல்வேறு கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்ட்டை வைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.