வழமையாக எமது புகைப்படங்களை எடிட் செய்து, வடிவமைப்பதற்கு போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துகிறோம். அதை தவிர புகைப்பட வடிவமைப்பிற்கென சில ஆன்லைன் தளங்களும் இவ்வசதியை எமக்கு தருகின்றன. என்னதான் ஒவ்வொருவரும் போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தினாலும், அம்மென்பொருளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அதில் முழுமையான உச்ச பயன்பாட்டை பெற்றுக்கொள்ள முடிகிறது. எனது கணணியில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தாலும், அதில் நான் ஒரு ஆரம்பநிலை பயனர் தான். முழுமையான தேர்ச்சி என்பது சொல்வதற்கில்லை. அப்படி இருக்கையில் நான் எனது புகைப்படங்களை, நான் போட்டோஷோப்பில் கற்றுக் கொண்டதை விடவும் இன்னும் வித்தியாசமாக, அழகாக, இலகுவான முறையில், அழகான விளைவுகளை (effect) பிரயோகித்து வடிவமைப்பது எவ்வாறு என சிந்தித்தபடியே இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது, புகைப்பட அனிமேஷன் வடிவமைப்பிற்கான இரண்டு ஆன்லைன் தளங்கள் கண்ணில் பட்டது. அதில் ஒன்று Lunapic தளம்.
இதில் நாம் எமது புகைப்படங்களை கணணியில் அல்லது வேறு தளங்களில் இருந்து தரவேற்றம் செய்து விரும்பிய முறையில் வடிவமைக்கலாம். அதன் முகப்பு தளம் கீழே உள்ளவாறு விரிகிறது.
இத்தளத்தில் இடது பக்கத்தில் புகைப்பட வடிவமைப்பிற்கான வழமையான கருவிகள் கீழ் நோக்கிய வரிசையில் மஞ்சள் வர்ணத்தில் காணப்படுகின்றன. இத்தளத்திற்குரிய சிறப்பம்சமான விடயங்கள் மேலே மெனு வரிசையில் உள்ள Effects மற்றும் Animations ஆகும். இத்தளத்தில் எனக்கு பிடித்த விடயங்களும் இவைதான். எமது புகைப்படங்களை தரவேற்றம் செய்து விட்டு, நாம் விரும்பும் Effects அல்லது Animations ஐ நேரடியாக படங்களின் மீது தெரிவு செய்து பிரயோகிக்கலாம்.
இத்தளத்தில் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தரவேற்றிய பின்னர் அதற்கு மெனு பகுதியில் உள்ள Animations இல் உள்ள Water droplet என்பதை தெரிவு செய்ய எனது படம் பின்வருமாறு கிடைத்தது.
lunapic_127696481323401_8.gif
இதே படத்தில் மீண்டும் மெனுவில் Animation சென்று அதில் Reflecting water என்பதை தெரிவு செய்ய படம் பின்வருமாறு தெரிந்தது.
lunapic_127696481323401_9.gif
இதே போல் நீங்களும் உங்கள் புகைப்படங்களுக்கு வித்தியாசமான அனிமேஷன் எபக்ட்ஸ் வழங்கி முயற்சி செய்து பார்க்கலாம். இலவச இணைப்பாக இன்னொரு தளத்தின் சுட்டியையும் தருகின்றேன். அதிலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். தளத்தின் பெயர் பிக்னிக் டாட் காம். பயன்படுத்தி பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மென்பொருள்
No comments:
Post a Comment