பள்ளி முதல் கல்லூரி வரை எடுக்கப்படும் பாட சம்பந்தப்பட்ட
குறிப்பை புதுமையான முறையில் ஆன்லைன் மூலம் இலவசமாக
சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாம் எடுக்கும் குறிப்பை (Notes)
ஆன்லைன் -ல் இலவசமாக சேமித்து எங்கு சென்றாலும்
இணையதளம் மூலம் பார்க்கலாம். நோட்டு புத்தகங்களை எல்லாம்
தூக்கி செல்லும் காலம் விரைவில் முழுமையாக மாறப்போவதற்கு
எடுத்துக்காட்டாக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :http://www.mynoteit.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக்
கொண்டு நாம் வகுப்பில் படித்த குறிப்பை சேமித்து வைக்கலாம்.
தினமும் ஆசிரியர்கள் வகுப்பில் கொடுக்கும் அத்தனை
குறிப்புகளையும் ஒவ்வொரு பாடம் வாரியாக சேமித்து வைக்கலாம்.
நமக்கென்று தனியாக ஒரு குழு உருவாக்கி கொண்டு அதில்
ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்லது ஒரே வகுப்பில்
படிக்கும் மாணவர்கள் என அனைவரும் தங்களுக்கு எழும்
சந்தேகங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிதாக ஆசிரியர் கொடுக்கும் Assignment பற்றி கூட விவாதித்து
கட்டுரை எழுதலாம். ஒருவர் எழுதும் குறிப்பை அனைவருடனும்
எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். காலண்டர் வசதியுடன் இருப்பதால்
குறிப்புகளை எளிதாக தேடிப்படிக்கலாம். நம் வீட்டு செல்லங்களுக்கும்
இது போன்ற இணையதளங்களைப்பற்றி கூறி அவர்களின் அறிவை
உலக அளவில் வளர்க்க நம்மால் ஆன முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment