Saturday, October 2, 2010

வன்னிப் போரை அடிப்படையாகக் கொண்டு கணணி விளையாட்டு!

eelam வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரை அடிப்படையாகக் கொண்டு கணணி விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  `Ghost Recon Predator` எனப் பெயரிடப்பட்டுள்ள இவ் விளையாட்டுக்கான மென்பொருளை பிரான்ஸ் Ubisoft Entertainment என்ற மென்பொருள் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கணணி விளையாட்டுக்கான மென்பொருள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருமென குறிப்பிட்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  இக் கணணி விளையாட்டு தொடர்பான முன்னோட்ட ஒளிப்படங்களை Ubisoft Entertainment என்ற மென்பொருள் நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்காப் படையினர் காட்டுப் பகுதிகளில் பின்தொடர்ந்து சென்று தாக்குவது போன்ற கட்சிகள் இவ் ஒளிப்படங்களில் இடம்பெற்றுள்ளன. பொது மக்களைத் தாக்குவது, பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது, சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் மனிதவிரோ நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றன விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளாக இந்த ஒளிப்படங்களைத் தொடர்ந்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் மீதான பாரிய இனப்படுகொலை நடவடிக்கையை சர்வதேச சமூகமும், மனிதவுரிமை அமைப்புக்களும் கண்டித்திருந்த நிலையில் Ubisoft Entertainment என்ற மென்பொருள் நிறுவனம் இக் கணணி விளையாட்டுக்கான மென்பொருளை தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment