Saturday, October 2, 2010

மென்பொருட்களின் சீரியல் இலக்கம் தொலைந்து விட்டதா?

எமது கணணியில் பல்வேறு மென்பொருட்களை உள்ளீடு பயன்படுத்திக்கொண்டு இருப்போம். அம்மென்பொருட்களின் வட்டுக்களையும் அதன் லைசன்ஸ் இலக்கங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். ஆனாலும் சமயங்களில் கவனக்குறைவாக மென்பொருட்களின் சீரியல் இலக்கங்களை தொலைத்து விடுவதுண்டு. ஏதேனும் ஒரு காரணத்தினால் குறிப்பிட்ட மென்பொருட்களை மீண்டும் கணணியில் உள்ளீடு செய்ய வேண்டி வரும் நேரங்கள் வரும் போது தான் தொலைத்த இலக்கங்களை தேடி அலைந்து கொண்டிருப்போம். இந்த சிக்கல்களில் இருந்து விடுபட ஒரு மிகச்சிறிய 74KB அளவுள்ள License Crawler எனும் மென்பொருள் கைகொடுக்கிறது. இதனை பயன்படுத்தி கணணியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள மென்பொருட்களின் லைசன்ஸ் இலக்கங்களை முன்கூட்டியே பெற்று பத்திரப்படுத்தி வைக்கலாம். இதன் தரவிறக்க தள சுட்டி இதோ.


சிப் பைலாக இறங்கும் இதை இன்ஸ்டால் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. சிப் பைலை விரித்தவுடன் மென்பொருளை இயக்கவேண்டியது தான். அதை இரட்டை சொடுக்கு செய்தவுடன் அதன் முகப்பு இவ்வாறு விரியும்.



இதில் Accept பொத்தானை அழுத்தியவுடன் வரும்படம் கீழே உள்ளது.




இதில் உள்ள செட்டிங்க்சில் எந்த மாற்றமும் செய்யாமல் Start search பொத்தானை அழுத்த வேண்டியது தான். உங்கள் கணணியில் உள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து, உள்ளீடு செய்யப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் லைசன்ஸ் இலக்கங்களை பட்டியலிடுகிறது. ஆனால் இது நூறு சதவிகிதம் செயல்படுகிறதா என்பதில் எனக்கு சிறு சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் எனது கணணியில் உள்ள போட்டோஷாப் மென்பொருளின் லைசன்ஸ் இலக்கம் மட்டும் இதில் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தேன் பலனில்லை. நீங்கள் உங்கள் அனுபவங்களை கூறுங்கள்.

மென்பொருள்

No comments:

Post a Comment