Thursday, October 28, 2010

உபுன்டு லினக்ஸ் 11.04 செய்திகள்.jaffnanet.blogspot.com

பிறந்த குழந்தைக்கு ஒரு முறைதானே பெயர்சூட்டுவிழா நடத்தமுடியும். ஆனால் உபுன்டுவுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பெயர்சூட்டுவிழா நடத்தி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு உபுன்டு ரிலீசுக்கும் செல்லப்பேர் வைப்பது அதிகம் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகவே மாறி வருகிறது

இப்பதான் உபுன்டு 10.04 (லூசிட் லிங்க்ஸ்- Lucid Lynx) வந்தாமாதிரி இருக்கு.

அதற்கு அடுத்த உபுன்டு 10.10-க்கு 'மாவெரிக் மீர்கேட்'னு (Maverick Meerkat) எப்பவோ பேர் வைத்து 10.10.10 அன்று (அதாங்க 10 அக்டோபர் 2010) ரிலீஸ் செய்யலாமான்னு யோசித்துக்கொண்டு இருக்காங்க. (நல்லாத்தான் யோசிக்கறாய்ங்க!)

அதுக்குள்ளே உபுன்டு 11.04க்கு செல்லப்பேர் வைத்துவிட்டார்கள். என்ன தெரியுமா?

Natty Narwahl (நாட்டி நர்வால்).

(11.04 = 2011-வது வருடம், 4-ஆவது மாதம்)

நர்வால் ஆர்டிக் துருவத்தில் வாழும் ஒரு திமிங்கலம். யானைக்கு தந்தம் இருப்பதுபோல் இதற்கும் முகத்தில் ஒரு தந்தம் இருக்கும்.


அதைக் கேட்காமலேயே 'நர்வால்' பேரை வச்சா அது பங்கு கேட்டு வரவோபோகுது?

என்னை கேட்டா Naughty Namitha (நாட்டி நமீதா)-னு பேர் வெச்சிருந்தா ரொம்ப டக்கரா இருந்திருக்கும்.

உபுன்டு இன்னும் இளமையா Teenage-லதான் இருக்கு. ஏன்னா நாட்டி நர்வால் அதனோட 14-வது ரிலீஸ்.

நாட்டி நர்வால் ஒரு non-LTS ரிலீஸ். அதாவது அது ரிலீஸ் ஆகும் தேதியிலிருந்து 18 மாதங்களுக்குத்தான் சாஃப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் தருவாங்க.

No comments:

Post a Comment