இலவச சோலாரிஸ் OS - நிறுத்திய ஆரகிள்
லினக்சின் போட்டியை சமாளிக்க சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் தனது சோலாரிஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ள அனுமதி அளித்திருந்தது. சன்னிடம் முறையாக பதிவு செய்துவிட்டு, அதை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆரகிள் நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டத்தை சமீபத்தில் வாங்கியது. ஆரகிள் இனிமேல் சோலாரிஸ் 10 டவுன்லோடு செய்பவர்கள் 90 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சொல்லி சோலாரிசை டிரையவேராக (Trialware) மாற்றி விட்டது. 90 நாட்களுக்கு மேலும் பயன்படுத்தவேண்டும் என்றால் ஆரகிளிடம் பணம்கொடுத்து சப்போர்ட் காண்டிராக்ட் வாங்கிக்கொள்ள வேண்டும்.
ஆனால் வணிக நோக்கில்லாத பெர்சனல் உபயோகத்திற்கு சோலாரிஸை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சோலாரிஸ் சுதந்திர மென்பொருள் அல்ல.

ஓப்பன்சோலாரிஸ் OS சிடி இனிமேல் இலவசம் இல்லை
https://shipit.ubuntu.com/ போய் பதிவு செய்தால் வீட்டிற்கே இலவச உபுன்டு
சி.டி வருவது போல் ஓப்பன்சோலாரிஸ் இயங்குதள சி.டியும் இலவசமாக வந்துகொண்டு
இருந்தது. சன்னை வாங்கிய ஆரகிள் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது. இனிமேல்
அந்த சிடி இலவசமாக வீட்டிற்கு வராது.
ஆனால் சுதந்திர மென்பொருள் ஓப்பன்சோலாரிஸை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

சோனி PS3-ல்
லினக்சுக்கு இடம் இல்லை
முதல் தலைமுறை (Non-slim) சோனி பிளேஸ்டேஷன் 3 கருவி வீடியோ கேமிற்காக தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அதில் இருந்த Install other OS என்ற வசதியை பயன்படுத்தி அதில் லினக்ஸை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வழி இருந்தது.
இந்த PS3-க்கு புதிய Firmware (நம்ம கம்ப்யூட்டர் BIOS மாதிரி) வெளியிட்ட சோனி, அந்த Firmware அப்கிரேடுக்குப் பிறகு PS3-ல் லினக்ஸ் இன்ஸ்டால் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டது.

அனைத்து தொழில்நுட்ப செய்திகளையும் ஒரே பக்கத்தில் பார்க்க தொழில்நுட்ப செய்திகள் tag கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment