Thursday, October 28, 2010

உபுன்டுவில் suspend/hibernate கீ disable செய்வது எப்படி?.jaffnanet.blogspot.com


தொலைபேசி அழைப்பு வந்ததே என்று கணினியில் இருந்து எழுந்துபோய் பேசிவிட்டு வருவதற்குள், உங்கள் சுட்டியான குட்டிப் பாப்பா நாற்காலிமேல் ஏறி கீபோர்டில் இரண்டு கைகளாலும் தாளம்போடும்போது, தெரியாமல் suspend/ hibernate/ power கீயை தொட்டு கணினியை தூங்கவைத்துவிடுகிறதா?

அப்படியானால் பாப்பா மேல் கோபப்படாமல், அந்த கீகளை உபுன்டு லினக்ஸில் செயலிழக்கச் செய்ய/ செயல்படும் விதத்தை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உபுன்டு லினக்ஸ் டெஸ்க்டாப்பில் இருந்து Alt + F2 கீகளை ஒரே நேரத்தில் சேர்த்து இயக்கவும். Run Application விண்டோ வரும்.


அதில் gconf-editor என்று டைப் செய்து Run பட்டன் கிளிக் செய்யவும்.


Configuration Editor விண்டோ திறக்கும்.


அதில் Apps > Gnome-Power-Manager > Buttons வரை கிளிக் செய்து சென்றால் இந்த விண்டோ வரும்.


வலது பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (Pane) இருக்கும் ஒவ்வொரு என்ட்ரியையும் கிளிக் செய்யும்போது அதன் Key Documentation கீழே இருக்கும் கட்டத்தில் இப்படி தெரியும். (The action to take when the system suspend button is pressed. Possible values are "suspend", "hibernate", "interactive", "shutdown" and "nothing".)


உதாரணத்திற்கு, suspend கீயை செயலிழக்க வைக்க முதலில் அந்த என்ட்ரியை Name column-மில் கிளிக் செய்து செலக்ட் செய்துவிட்டு, வலது பக்கத்தில் இருக்கும் value column-மில் இருக்கும் அதற்குரிய என்டிரியை டபுள் கிளிக் செய்து nothing என்று டைப் செய்து மாற்றி சேமிக்கவும்.


இப்படி..


Configuration Editor விண்டோவை உடனே மூடிவிடலாம். ஏனென்றால் தனியாக save ஆப்ஷன் கிடையாது. ரீஸ்டார்ட் கூட செய்யத்தேவையில்லை. தைரியமாக இப்போது suspend கீயை அழுத்திப்பார்த்தால் கணினி தூங்காது.

Suspend/hibernate அழுத்திய பிறகு என்ன செய்வது என்று கணினி நம்மை கேட்கவேண்டும் என்றால், interactive செட் செய்யவும். அப்போது கணினி இப்படி கேட்கும்.


லேப்டாப்பை மூடும்போது அது ஏசி மின்சாரத்தில் ஓடிக்கொண்டு இருந்தால் என்ன செய்யவேண்டும் ? பேட்டரியில் ஓடிக்கொண்டு இருந்தால் என்ன செய்யவேண்டும்? என்பதையும் நாம் இந்த வழியில் செட் செய்துகொள்ளலாம் (Possible values are "suspend", "hibernate", "blank", and "nothing").

"என் புருஷனே இன்னும் குழந்தையாத்தான் இருக்காருங்க. அவரும் இந்தமாதிரி எதனா செஞ்சிடுராரு" என்று சலித்துக்கொள்ளும் மனைவிகளுக்கும் இந்த கட்டுரை உதவும்.

No comments:

Post a Comment