Thursday, October 28, 2010

என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks!!.jaffnanet.blogspot.com

நன்றி சொல்லும் நேரமிது! NDTV Hindu டிவி சேனலில், சென்ற வெள்ளிக்கிழமை (4.12.2009) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான "Reliance Big TV Byte It" நிகழ்ச்சியில் திரு.சைபர்சிம்மன், கெளதம் இன்ஃபோடெக் திரு. வடிவேலன் இவர்களுடன் என்னையும் பேட்டி எடுத்து வெளியிட்டு இருந்தார்கள். தமிழ் மொழியில் கம்ப்யூட்டர்/இன்டர்நெட்/மென்பொருட்களைப் பற்றி எழுதும் வலைப்பூக்களைப் பற்றி அறிந்ததும், என்.டி.டி.வி ஹிந்து சேனல் உடனடியாக செயல்பட்டு, சென்னையில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப பதிவர்களைப் பற்றி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. இல்லத்தரசிகள், பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், கிராமங்களில் வாழும் மக்கள், இதுவரை கம்ப்யூட்டரை முறையாக கற்க வசதி/நேரம் இல்லாமல் இருப்பவர்கள், இப்படி சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும், தொடந்து நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களால் கணினியை பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். உதாரணம் : ஆன்லைன் பேங்கிங், ஆன்லைன் டிரேடிங், ஆன்லைன் புக்கிங். ஆன்லைன் தேர்வுகள், இப்படி நிறைய. கணினிகள் பெரும் முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், ஒரு சாதாரண மனிதன் (Lay person) அதை புரிந்துகொண்டு முழுமையாக பயன்படுத்துவதும், எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் சீராக பராமரிப்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்கான பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து படித்தாலும், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ குறைந்த அளவே தெரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்டவர்கள், நிறைய விஷயங்களை அனுபவத்தில்தான் கற்றுக் கொள்கிறார்கள். “என்னதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் வைரஸ் வந்து டேட்டா அழிந்துவிடுகிறது”. இப்படி புலம்புவர்களை நாம் தினமும் பார்க்கிறோம். அதிலும் ஆங்கிலம் சரியாக தெரியாமல் இருப்பவர்களின் நிலைமை மேலும் கடினம்தான். ஏனென்றால் கணினி சம்பந்தமான அதிகபட்ச செய்திகள் இன்டெர்நெட்டில் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அதனால் நிறைய தேவையான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளன. தமிழர்கள் இதைப் பற்றி படிக்க, கேள்வி கேட்க, ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இன்றியமையாத ஊடகமாக (Media) இவை வளர்ந்து வருகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வலைப்பூக்களைப் பற்றிய விழிப்புணர்வு, கணினிகளை பயன்படுத்தும் மக்களிடம் குறைவாகவே உள்ளது. என்.டி.டி.வி ஹிந்துவின் இந்த நிகழ்ச்சி, இந்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். என்.டி.டி.வி. ஹிந்துவுக்கு மில்லியன் பில்லியன் Thanks. என்.டி.டி.வி ஹிந்துவின் சரித்ரா பார்த்தசாரதி, பிரதிபா மற்றும் ஒளிப்பதிவாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். Youtube-ல் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் மேற்கண்ட வீடியோவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடைசியாக நான் பார்த்தபோது 3200+ Views!

No comments:

Post a Comment