Thursday, October 28, 2010

மென்பொருள் Service Packs - நமக்கு ஏன் தேவை?.jaffnanet.blogspot.com

மென்பொருள் Service Packs என்றால் என்ன?

நாம் ஏன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
தெரிந்துகொள்வதால் என்ன லாபம்?
Service Packs ஏன் தேவைப்படுகின்றன?

பதில்: பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கத்தான்!

பொதுவாக எந்த ஒரு மென்பொருளுக்கும், அதன் முதல் ரிலீசுக்குப் பிறகு patches எனப்படும் updates கொடுப்பார்கள்.


Service Pack-ல் குறிப்பிட்ட மென்பொருளில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகளை சரிசெய்வார்கள். அல்லது சில features /நம்பகத்தன்மை /பாதுகாப்பு /வேகத்தை மேம்படுத்துவார்கள்.

அந்த மென்பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட தேதி வரை வெளியாகிய updates-களை சேர்த்து ஒரே Install.exe-யாக கொடுப்பதுதான் Service pack.

எல்லா updates-ஐயும் தனித்தனியாகவும் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரே புரோகிராமாக இருப்பது பல விதத்திலும் சௌகரியம்.


ஒவ்வொரு கணினியையும் இன்டெர்நெட்டில் கனெக்ட் செய்து தனித்தனியாக update செய்வதற்கு பதில் (நூற்றுக் கணக்கான குட்டி updates-க்கு எத்தனை reboot கேட்டு உயிரை எடுக்குமோ?), இன்டெர்நெட்டில் இருந்து ஒரே ஒரு Service pack-ஐ டவுன்லோடு செய்யலாம்.

பிறகு, நெட்வொர்க்கில் இருக்கும்/இல்லாத எல்லா கணினிகளையும், அந்த ஒரே ஃபைலை வைத்து எளிதாக அப்டேட் செய்துவிடலாம்.

Bandwidth மிச்சம்!

Service pack இன்ஸ்டால் செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் பொதுவாக இல்லை. நம் விருப்பம்தான். ஆனால் பிரச்சனை வேண்டாம் என்றால் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.

சில சமயம் ஒரு மென்பொருள் நிறுவும்போது குறிப்பிட்ட Service Pack இருந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும்.


பொதுவாக முதல் Service pack-ற்கு SP1 எனவும், அடுத்தடுத்த Service Packs-க்கு வரிசையாக SP2, SP3 ...என பெயரிடுவார்கள்.

Service Pack-ல் இரண்டு வகை உண்டு.

1. Incremental service pack

2. Cumulative service pack.

Cumulative service pack என்றால் மென்பொருளின் முதல் ரிலீஸ் + கடைசி Service Pack அடுத்தடுத்து போட்டால் போதும். ஏனென்றால், கடைசி Cumulative Service pack-ல் முந்தைய எல்லா Service pack-களில் இருந்த எல்லா updates-ம் சேர்க்கப்பட்டு இருக்கும்.


Incremental service pack-ல் முந்தைய கடைசி Service pack-ற்கு அப்புறம் வந்த updates மட்டுமே இருக்கும். அதனால் அவர்கள் சொல்லும் கடைசி Service pack-ஐ apply செய்த பிறகுதான், இப்போது வந்த புதிய Service pack-ஐ apply செய்ய முடியும்.

எடுத்துக்காட்டாக, விண்டோஸ் XP SP2 (Cumulative Service Pack) இன்ஸ்டால் செய்ய XP SP1 தேவையில்லை. ஆனால் XP SP3 இன்ஸ்டால் செய்ய, முதலிலேயே XP SP1 அல்லது XP SP2 இன்ஸ்டால் ஆகி இருக்க வேண்டும்.

அந்த மாதிரியே, விண்டோஸ் Vista SP2-வை எடுத்தவுடன் apply செய்ய முடியாது. Vista SP1 apply செய்த பிறகே Vista SP2 apply செய்ய வேண்டும். ஏனென்றால் Vista SP2 ஒரு Incremental Service Pack.

சில அரைகுறையாக ரிலீஸ் ஆன Service pack போட்டு, நல்லா இருந்த கணினியும் புதிதாக பிரச்சனை கொடுத்த கதையும் உண்டு.

Service pack-ஐயும், மென்பொருளின் அடுத்த ரிலீஸையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இரண்டும் ஒன்றல்ல.

Service pack போட்டாலும், மென்பொருள் அதே ரிலீஸில்தான் இருக்கும்.

Service pack Status கண்டுபிடிக்க அந்தந்த மென்பொருளின் Help -> About மெனு போய்ப்பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களின் Service packs-க்கு இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment