ஆராய்ச்சியை புரிந்துகொள்ளத் தேவையான
அடிப்படை விவரம்.
Blogger-ல் (Blogspot) நமக்கு தேவையான
வலைப்பூவை இரண்டு விதமாக Follow செய்யலாம்.
1. வெளிப்படையாக
(Publicly)
2.
இரகசியமாக ( Privately or Anonymously or Secretly)
எந்த
விதமாக Follow செய்தாலும், அந்த வலைப்பூவின் புதிய பதிவுகளை Blogger
Dashboard-ல் உள்ள ‘Reading List' வழியாக Follow செய்பவர் உடனுக்குடன்
தெரிந்துகொள்ளலாம்.
’Public
Followers" எத்தனை என்பதை Followers Widget-ல் பார்த்து
தெரிந்துகொள்ளலாம். ஆனால் “Secret Followers" எத்தனை என்பதை நேரடியாக
தெரிந்துகொள்ள வழி இல்லை.
குறிப்பிட்ட Follower நமக்கு தேவையில்லை
என்றால் அவரை Block செய்துவிடலாம். அவர் ”Blocked Followers"
லிஸ்ட்டுக்கு போய்விடுவார்.
ஆராய்ச்சியில்
இறங்கியது ஏன்?
”யாராவது என் வலைப்பூவை இரகசியமாக Follow
செய்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா?
”
இது எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கும் ஒரு சந்தேகம்.
அதிர்ஷ்டவசமாக அந்த சந்தேகத்தில் பாதியை நானாகவே Solve செய்துவிட்டேன்.
எனக்கு
தெரிந்து இதற்கு முன் யாரும் இதை Solve செய்யவில்லை. (தற்பெருமை
அடித்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். சான்ஸை விட்டுடாதே! சரி.... டும்
டும் டும்).
இதற்கு விடை கூகிளில் எவ்வளவு நேரம் தேடினாலும்
கிடைக்காது. ஏனென்றால் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன்.
அதுவும்
இந்த ஆராய்ச்சியின் முடிவு தமிழில் முதல்முதலாக வெளிவருவதில் இரட்டிப்பு
மகிழ்ச்சி.
துப்பறியும்
காண்டம்.
முதலில் உங்கள் கூகிள் கணக்கில் Login
செய்துகொள்ளவும்.
"Blocked Followers" எண்ணிக்கையை (If any)
தெரிந்துகொள்ள Blogger Dashboard-ல் உள்ள Followers கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் பக்கத்தில் Show Blocked Followers கிளிக் செய்து Blocked
Followers எண்ணிக்கையை கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
உங்கள்
வலைப்பூவின் "Secret Followers"-ன் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள உங்கள்
"Public Followers" எண்ணிக்கையையும், “Blocked Followers" எண்ணிக்கையையும்
கூட்டிக் கொள்ளவும் (SUM1).
அடுத்து
http://www.google.com/friendconnect
செல்லவும்.
உச்சகட்டம் (Climax)
Google
FriendConnect இடது பக்கத்தில் உங்கள் பிளாக் பெயரை கிளிக் செய்து
Community Data கிளிக் செய்யவும். மேலும் Membership Tab கிளிக்
செய்யவும். Total Members என்று ஒரு எண்ணிக்கை வரும். அதில் SUM1 கழித்துவிட்டால் மீதி
வருவதுதான் உங்கள் வலைப்பூவின் Secret Followers-ன் எண்ணிக்கை.
எடுத்துக்காட்டாக
எனக்கு
Total Members கூகிள் FriendConnect-படி .... 129
Public
Followers ................................................118
Blocked
Followers................................................. 7
அப்படியானால்
ஃபார்முலா பின்வருமாறு
Total Members - Public Followers - Blocked
Followers = Secret Followers.
129 - 118 - 7 = 4 Secret
Followers.
நானே என்னை இரகசியமாக Follow செய்து கொள்கிறேன்.
(Blogger Reading List-லே என் பதிவுகள் ஒழுங்கா வருதான்னு செக் பண்ண
வேணாமா?). அப்படின்னா என்னை கழித்த பிறகு 3 வருகிறது.
இப்ப
கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 3 பேர் இரகசியமாக Follow
செய்கிறார்கள் என்று.
எங்கேப்பா Claps / விருது / பட்டம் / ஓட்டு?
No comments:
Post a Comment