சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும்போது ’அந்த’ இம்சை/அடிமை மென்பொருள் நமக்கு எதற்கு? (சொல்லுங்க பார்க்கலாம். ’அந்த’ என்று நான் குறிப்பிடுவது ’எந்த?’)
இதை நன்றாக புரிந்துகொண்ட நாட்டுப் பற்று மிக்க அமெரிக்கர்கள், அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் சுதந்திர மென்பொருட்களின் பயன்பாட்டை கொண்டுவரவும், அதிகப்படுத்தவும் Open Source For America (http://opensourceforamerica.org/) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
சுதந்திர மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதால் அவை ஏழைபாழைகளுக்குத்தான் என்று நீங்கள் இதுவரை நினைத்து இருந்தால், அந்த எண்ணத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவிடம் இல்லாத காசா? பணமா? அவர்கள் ஏன் தங்கள் அரசிடம் சுதந்திர மென்பொருளை பயன்படுத்த வற்புறுத்துகிறார்கள்?
இலவசம் என்பது சுதந்திர மென்பொருட்களின் பல முகங்களில் ஒரு முகம்தான். இலவசம் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைத்துக்கொண்டு அதை மட்டம் தட்டுவது தவறு.
இலவசம் என்ற நன்மையையும் தாண்டி Freedom, Transparency, Choice, Security, Fast Updates - இப்படி மேலும் பல நன்மைகள் அரசு இயந்திரத்திற்கு/மக்களுக்கு சுதந்திர மென்பொருட்களால் கிடைக்கும்.
அமெரிக்கர்கள், மென்பொருள் பயன்பாட்டில் தனியார் உரிமை மென்பொருட்களையும் (Proprietory Software) தாண்டி, அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
நாம்தான் ‘அந்த’ மென்பொருளைக் கட்டிகொண்டு அழுதுகொண்டு இருக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் ’அந்த’ இயங்குதளத்தைதான் பயன்படுத்துவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறந்து வந்திருக்கிறோமா. என்ன?
எந்த நாட்டிலாவது ‘அந்த’ மென்பொருள்தான் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன?
மென்பொருள் துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே!
அவர்களே சுதந்திர மென்பொருட்களின் அருமை தெரியாமல் ‘அந்த’ அடிமை மென்பொருளைத்தானே தினசரி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டுப் பற்று இருந்தால், இந்திய மக்கள் அனைவரும் விரும்பி எளிதாக பயன்படுத்தும் வகையில் லினக்ஸ் போன்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களை அவர்கள் மேம்படுத்திகொண்டே இருக்கவேண்டும். மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்பவேண்டும்.
நம் நாட்டிற்கு ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை கிடைத்து விட்டது. ஆனால மென்பொருள் சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை.
அதே மாதிரி OpenSourceForIndia.Org வலைத்தளத்தை இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து ஆரம்பிக்கும் தருணம் வந்துவிட்டது. செய்வார்களா?
இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன்,என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?என்று மடியும் இந்த அடிமை மென்பொருள் மோகம்?
No comments:
Post a Comment