நமது கணணி பயன்பாட்டில் மிகப்பெரிய சவாலாக அமைவது வைரஸ் புரோகிராம்களே.இவை கணனியில் உள்ள தகவல்களை பதம் பார்ப்பதில் பலே கில்லாடிகள். நாமும் இவற்றை அழிப்பதற்கு விதம் விதமான anti virus களை பயன்படுத்துகிறோம்.ஆனாலும் வைரஸ் புரோகிராம்கள் இவற்றையும் தாண்டி தமது வேலையை காட்டுகின்றன.
பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கணனியில் உட்புகுந்தவுடன் தமது என்ட்ரியை கணணியின் registry யில் பதிவு செய்கின்றது. வைரஸ்ஸை registry யில் பதிவு செய்ய முன்பே தடுத்தால் எப்படியிருக்கும்? அதற்கான மென்பொருள் தான் Winpatrol. இந்த புரோகிராமினை AOL ஈமெயில் கிளையன்ட் புரோகிராமை வடிவமைத்த BILL PYTLOVANY உருவாக்கினார்.
இந்த புரோகிராமை கணனியில் பதிந்தவுடன் எமது கணணியின் registry யை ஒரு snap shot எடுத்து வைத்துக்கொள்ளும். பின்பு அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும் போதெல்லாம் இது போல எழுதுவதற்கு இந்த புரோகிராம் முயற்சிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது. நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே registry யில் எழுதவிடும்.
இதன் காரணமாக நாம் ஏதேனும் ஒரு புரோகிராமினை install செய்யாத சமயத்தில் திருட்டுத்தனமாக நுழையும் புரோகிராம்களை தடுக்க முடிகிறது. இந்த வகையில் Winpatrol ஒரு சிறந்த security மென்பொருள் ஆகும்.
Download link : Click here
No comments:
Post a Comment