எமது ஆங்கிலம் வலைத்தளத்தில் "பாடங்களை பிடிஎப் கோப்புகளாகப் பதிவிறக்கி பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது" எனும் செய்தியை அன்மையில் வெளியிட்டிருந்தேன். அவ்வசதியினை என்னைப்போல் பலரும் தங்கள் தங்கள் வலைப்பதிவுகள் ஊடாக வழங்கியிருப்பீர்கள். அதன் பயனால் வருகையாளர்கள் எளிதாக தாம் விரும்பும் எந்தவொரு இடுகையையும் பதிவிறக்கி பயன்படுத்துவர்.
ஆனால் அவ்வாறான வசதியை அளிக்காத எத்தனையோ எண்ணற்ற சிறப்பான வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் இணையக் கடலில் குவிந்து கிடக்கின்றனவே! அவற்றை பதிவிறக்கி பயன்படுத்தவது எப்படி? அவற்றை எமது கணனிகளில் PDF கோப்புகளாக பதிவிறக்கி பயன்படுத்த முடியுமானால், எவ்வளவு எளிதாக இருக்கும்?
அதற்கான வசதியை PDF my URL தளம் அளிக்கிறது.
நாம் விரும்பும் இடுகையின் URL முகவரியை இட்டு பதிவிறக்குவதற்கான அடையாள படத்தை சொடுக்கியுடன், அடுத்த செக்கன்களின் நமக்குத் தேவையான இடுகை, பிடிஎப் கோப்பு வடிவமாக நமது கணனிகளில் சேமிக்கப்பட்டுவிடுகிறது.
மேலதிகத் தேர்வுகள்
Advanced Options எனும் மேலதிகத் தேர்வுகள் சுட்டியை சொடுக்கி மேலும் உங்கள் வலைப்பதிவில் இதனை பயன்படுத்தும் வசதிகளை செய்துக்கொள்ளலாம்.
தள முகவரி: http://pdfmyurl.com/
குறிப்பு:
இந்த வலைத்தளத்தில் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று தான் எழுதுகிறேன். எழுதாமல் விடுப்பட்டு போனமைக்கு காரணங்கள் இரண்டு உள்ளன. முதல் காரணம்; அதிகமான வலைப்பதிவுகளை தொடர்ந்து எழுதி பராமரிக்க முடியாமை. இரண்டாவது காரணம்; என்னைவிட சிறப்பாக கணனி தொழில் நுட்பத் தகவல்களை எழுதிவரும் முன்னோடி பிகேபி, அனைவரதும் அன்புக்கு இலக்கான நெஞ்சம் தமிழ்நெஞ்சம் போன்றொரின் எழுத்துக்கள். தற்போது இந்த வரிசையில் போட்டோ சொப் சிறப்பாளர் வேலன், அன்மையில் கலக்கும் tvs50 போன்று இன்னும் பலர் சிறப்பாக எழுதிவருகின்றனர். இவ்வனைவரும் வழங்கும் தொழில் நுட்பத் தகவல்களால்; தமிழ் கணனி உலகம் மேலும் வளர்ச்சி பாதை நோக்கி செல்கின்றது என்பது மகிழ்வான செய்தி.
நன்றி
No comments:
Post a Comment