இதோ இத்தளத்தின் முகவரி: http://www.addthis.com/
இப்பட்டனை எவ்வாறு எமது இடுகைகளில் தோன்றச் செய்வது, என அறிந்துக்கொள்ள விரும்புவோர், முதலில் Get Your Button எனும் இத்தேர்வை சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்.
1. இணையத்தளம், வேர்ட் பிரஸ், ப்ளொக்கர் எனும் (Select your service) தேர்வுகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
2. நீங்கள் விரும்பும் வடிவத்தை (Select a button style) தேர்வு செய்யுங்கள். மேலதிக தேர்வுகளும் (More Option) உள்ளன. நீங்கள் விரும்பினால் (Customize your button) எனும் தேர்வை சொடுக்கி தனித்துவமான வடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
3. Get the Code எனும் தேர்வு பட்டனை அழுத்தி நிரல் துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
எப்படி இணைப்பது?
1. உங்கள் வலைப்பதிவை திறந்து, (Layout) வார்ப்புருவில், Edit HTML எனும் தேர்வை சொடுக்குங்கள்.
2. "Expand Widget Templates" என இடப்பட்டிருக்கு சிறிய பெட்டிக்குள் ஒரு சொடுக்கிடுங்கள்.
3. இனி div class='pst-footer' என இடப்பட்டிருக்கும் இடத்தை தேடிப்பிடித்து, அதற்கு கீழ் நிரல் துண்டை ஒட்டிவிட வேண்டியதுதான். (கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதை கவனிக்கவும்.)
4. என்ன ஒட்டி விட்டீர்களா? இனி தளத்தை (Save) சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். (எனது தளத்தின் அடியில் காட்சியளிப்பதைப் பார்க்கவும்.)
இனி உங்கள் தளத்திற்கு வருவோர் மேலுள்ள வசதிகளை எளிதாகப் பெற்றுக்கொள்வர்.
இதன் விபரங்களை இக்காணொளி ஊடாகவும் அறிந்துக் கொள்ளலாம்.
இன்னுமொரு வசதி
ஒரே சொடுக்கில் 233 தளங்களூடாக உங்கள் இடுகைகளின் RSS ஓடையை பகிர்ந்தளிக்கும் வசதியையும் இத்தளம் வழங்குகின்றது. அதற்கு உங்கள் தளத்தின் RSS ஓடை முகவரியை இங்கே இட்டு அதற்கான நிரல் துண்டை பெற்று உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வசதியை அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப் பூர்வ தளம் முதல், உலகில் பிரசித்திப்பெற்ற முன்னனி தளங்கள் எல்லாம் பயன்படுத்துகின்றன. அத்தளங்களின் பட்டியலையும் நீங்கள் பார்வையிடலாம். பலத்தளங்கள் தனித்துவமான வடிவமைப்புடன் தங்கள் தளங்களில் இணைத்துள்ளன. சில தளங்களில் "Flash Effect" வடிவிலும் வடிவமைத்து இட்டுள்ளதைக் காணக்கிடைக்கிறது. உங்களால் முடிந்தால் நீங்களும் அவ்வாறு வடிவமைத்து பொதித்துக்கொள்ளலாம். சில மூன்றாம் தளங்கள் அவ்வாறு தனித்துவமான வடிவமைப்புடன் செய்துக்கொள்ளவும் உதவுகின்றன.
குறிப்பு:
இவ்வசதியினை பயன்படுத்தும் பதிவர்கள் சிலர் இருப்பினும், மேலும் பலரது பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் முகமானதே இவ்விடுகை.
நன்றி
No comments:
Post a Comment