Sunday, October 3, 2010

புரோட்பேன்ட் பாவனையில் சீனர்கள் முதலிடத்தில்.jaffnanet.blogspot.com

இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகத்தில் இணையம் எனும் இன்டர்நெற்றின் பயன்பாடு மிகமுக்கிமானதொன்றாகும். அந்த இன்டர்நெற் இணைப்பில் பல வகையான இணைப்புக்கள் இருந்தாலும் புரோட்பான்ட் வகை இணைப்பு மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது.


காரணம் இதன் தெளிவு, வேகத் தன்மை, இலகுவாக பயன்படுத்தக்கூடியது போன்ற பல காரணங்களினால் புரோட்பான்ட் இணையம் மூலைமுடுக்கெல்லாம் பரவிவருகின்றமை அனைவரும் அறிந்ததே.
அந்தவகையில் இன்றைய நிலையில் இணைய இணைப்பை பயன்படுத்துபவர்கள் என்ற வகையில் சீனா முதலிடத்தை பெற்றுள்ளது, அடுத்ததாக அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் திகழ்கின்றன.

எனினும் இணையஇணைப்பை குறைந்த விலையில் சந்தாதாரர்களுக்கு அதாவது சாதாரண மக்களுக்கு விநியோகிப்பதில் யப்பான் முதலிடத்தையும் பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் சுவீடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

அதேபோல் உலகத்திலே புரோட்பான்ட் இணைப்பு யப்பானில் தான் மிகவேகமாகவும் குறைந்த செலவிலும் மக்களுக்கு (23சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர்) வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment