Sunday, October 3, 2010

கணனி உலகில் அதிக பாதுகாப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள்!.jaffnanet.blogspot.com




கணனி உலகில் அதிக பாதுகாப்பு குறைபாடுகள்கொண்ட மென்பொருள்கள் அப்பிள் நிறுவனத்துடையதென கணனி மென்பொருள் பாதுகாப்புச் சேவை நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இவ்வளவு காலமாக மைக்ரோசொப்ட் நிறுவன மென்பொருள்களே அதிக பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளவையென கருதப்பட்டு வந்ததன.

' செக்கியுனியா ' (Secunia) எனும் நிறுவனமானது டென்மார்க் நாட்டை சேர்ந்த பிரபல கணனி மென் பொருள் பாதுகாப்புச் சேவை வழங்குனராக இயங்கி வருகிறது.

இந் நிறுவனத்தின் அறிக்கையின் படி அப்பிள் நிறுவனத்துடைய மென்பொருள்களே அதிக பாதுகாப்பற்றவையாக காணப்படுவதாகவும் அடுத்ததாக 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களில் முறையே ' ஒராக்கிள்' மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றது.

மேற்படி ஆய்வானது அப்பிளின் ' மெக் ஒஸ் ' (Mac OS )இயங்கு தளத்தையும் அப்பிளின் இதர மென்பொருள்களான iTunes, QuickTime, சபாரி ' மற்றும் 3ஆம் நபர் மென்பொருள்களான 'Flash , Java ' உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகும்.

அதன்படி குறைபாடுகள் அப்பிளின் இயங்குதளமான ' Mac OS ' ஐ விட மற்றைய மென்பொருட்களினாலேயே உண்டாக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.

3ம் நபர் மென்பொருள்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அந் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதிகபாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட மென்பொருட்கள்.

1.அப்பிள்

2. ஒராக்கிள்

3.மைக்ரோசொப்ட்

4. எச்பி

5. அடோப் சிஸ்டம்ஸ்

6. ஐபிம்

7. விம்வெயார்

8. ஸிஸ்கோ

9. கூகுள்

10. மொஸிலா

No comments:

Post a Comment