Sunday, October 3, 2010

உஷார் மக்களே !! ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனை

முக்கியமான வங்கி தகவல்களை வங்கியிலிருந்து கேட்பதாக கேட்டு
உங்களுக்கே ஆப்புவைக்க ஒரு கோஷ்டி இணையத்தில் வளம் வந்து
கொண்டிருக்கிறது..முதன்முறையாக அதேபோல் ஒரு மெயில் எனக்கு வந்தது..என்னால் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது..இது ஒரு ஹேக் மெயில் என்று.சரி என்ன மாதிரி தகவல்களை கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள சும்மா சில உல்டா தகவல்களை கொடுத்தபோது தெரியவந்தது..அதிர்ச்சியான தகவல்...

உங்களது வங்கி தகவல்களை சரிபார்க்கவேண்டும்..தயவுசெய்து உங்களது தகவல்களை கொடுத்து சரிபார்க்கவும்..என்று வங்கியிலிருந்து மெயில் வருவதுபோல்...ஒரு மின்னஞ்சல் வரும்..அதை திறந்தவுடன்..ஆன்-லைன் வங்கி பரிமாற்றத்திற்கு என்ன தகவல்களை கொடுப்பீர்களோ ,அந்த தகவல்களை கேட்டு ஒரு திரை வரும்...அத்தோடு விட்டு விடாமல்..அடுத்த திரையில்..உங்கள் டெபிட் கார்டில் உள்ள கிரிட் எண்கள் அத்தனையும் டைப் செய்ய சொல்லி ஒரு திரை
வரும்..இங்கு உங்கள் தகவலை கொடுத்தபிறகு..சமர்த்தாக வங்கியின் உண்மையான இணைய முன் பக்கத்திற்கு சென்றுவிடும்(இது உங்களை நம்ப வைப்பதற்காக..) -இந்த தகவலை வங்கிக்கும் தெரியபடுத்தியுள்ளேன்..

No comments:

Post a Comment