வலைப்பதியும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு; வலைப்பதிவின் ஊடாக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் எதுவும் சாதகமாக இல்லை. கூகிள் அப்சன்ஸ் விளம்பரங்களும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு கைகொடுப்பதாக இல்லை.
தமிழ் கூறும் நல்லுலகு நலம் பெறவேண்டும் எனும் நன்நோக்கில், எவ்வித இலாபமும் அற்று இணையத்தில் தன்னார்வப் பணியாக, பல அளப்பரிய பணிகளைச் செய்து வருவோர் இருக்கின்றனர். இன்றைய பொருளாதார நெருக்கடி மிக்க உலகில், அவர்களுக்கு சிறிதேனும் ஒரு தொகை நன்கொடையாக கிடைக்கப்படுமானால், அவர்களது பணி மேலும் ஊக்கத்திறனுடன் மேலோங்கும்.
உங்கள் இணைய சேவை அல்லது நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வழங்கும் தகவல்கள் பலருக்கும் பயன்மிக்கதாக இருந்தால்; உங்கள் பணியை ஊக்குவிக்கும் முகமாக, ஒரு தொகையை நன்கொடையாக வழங்கி உங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என எண்ணும் தயாள குணவாலர்கள் எம்மில் இருக்கவே செய்வர்.
அதற்கு நீங்கள் உங்கள் வலைத்தளத்தின் வருகையாளர்கள் நன்கொடை அளிப்பதற்கான வசதியை செய்திருக்க வேண்டும். அதை எப்படி செய்வது? அதற்கானதே இவ்விடுகை. அதற்கு பேபால் நன்கொடை பட்டனை உங்கள் வலைத்தளத்தில் தோன்றச் செய்ய வேண்டும். ஒருவர் நன்கொடை பட்டனை சொடுக்கி; பேபால் இணைய பணமாற்று வசதியூடாக உங்களுக்கு நன்கொடை அளித்தால், அதனை நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு, பேபால் தளத்தில் உங்களுக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும்.
இதுவரை பேபால் கணக்கு இல்லாதவர்கள், இங்கே சென்று புதிதாக ஒரு இலவசக் கணக்கை Sign Up Today திறந்துக் கொள்ளலாம். பேபால் PayPal தளத்தில் கணக்கு உள்ளவர்கள் புகுபதிகை செய்துக்கொள்ளுங்கள்.
இனி பேபால் நன்கொடை பட்டனை உங்கள் வலைத்தளத்தில் எவ்வாறு தோன்றச் செய்வது எனப் பார்ப்போம்.
வழிமுறைகள்
1. முதலில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை இட்டு புகுபதிகை Log in செய்துக்கொள்ளுங்கள்.
2. "Merchant Services" எனும் தேர்வில் சொடுக்குங்கள் (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.)
3. "Merchant Services" எனும் தேர்வை சொடுக்கிய உடன் தோன்றும் சாளரத்தை அப்படியே கீழ்நோக்கி இழுத்தால் வலப்பக்கம் "நன்கொடை" (Donations) எனும் தேர்வை காண்பீர்கள். அதனை சொடுக்குங்கள். (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.)
4. அதை சொடுக்கியவுடன் மேலும் பல தேர்வுகளைக் (Options) காண்பீர்கள், அப்படியே சற்று கீழே இழுங்கள். அதில் "ஒரு பட்டனை உருவாக்கு" (Create a button now) எனக் காணப்படும் தேர்வை சொடுக்குங்கள்.
5. அங்கே உங்களுக்கு ஒரு எச்டிஎம் எல் நிரல் துண்டு கிடைக்கும். அதனை நகலெடுத்து உங்கள் வலைத்தள வார்ப்புருவில் (Blogger Dashboard > Layout > Add a Page Element > html/Javascript) நீங்கள் விரும்பும் இடத்தில் ஒட்டி சேமித்துக்கொள்ள வேண்டியதுதான். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும்.
இனி உங்கள் வலைப்பதிவின் இடுகைகள் பயனுள்ளது என கருதுவோர், உங்களின் உழைப்பை மேலும் ஊக்கவிக்க வேண்டும் என விரும்புவோர், தங்கள் விரும்பும் ஒரு தொகையை, நன்கொடையாக அளித்துச்செல்ல இது ஒரு எளிதான வழிமுறையாகும். அதனை நீங்கள் உங்கள் பேபால் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு:
பேபால் இணையப் பணமாற்றம் முறை; இன்று உலகளவில் பல மில்லியன் மக்களின் நம்பகத் தன்மைக்கு பாத்திரமாக இயங்கி வருகின்றது. மேலதிக தகவல்கள் வேண்டப்படுவோர் பின்னூட்டத்தில் கேட்கலாம்.
நன்றி
அன்பு கூட வியாபாரமாக மாறிவரும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராமல் அள்ளிக்கொடுக்கும் உள்ளம் யாருக்குதான் இருக்கின்றது, இருப்பதை புடுங்காமல் விட்டாலே போதும், ஆனாலும் நல்ல விசயங்களால் ஈர்க்கப்பட்டு நன்கொடை கொடுக்கும் தயாளர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தங்கள் பதிவு பலருக்கும் பயன்படட்டும், வாழ்துக்கள்.
ReplyDelete