Fortran, Pascal, C, C++, Visual Basic, மற்றும் பல) புதியதும், இளையதுமான
மொழியாகும். "சி++"(C++) என்னும் இன்னொரு கணணிமொழியின் வாரிசாகப் பலரால்
கருதப்படுகிறது. காரணம், யாவா மொழி சி++ ஐ ஒத்திருப்பதேயாகும்.
சரி, கணணிமொழி என்றால் என்ன? அதற்கு முதல் மொழி என்றால் என்ன? ஆம், மொழி
என்பது மனிதர்களுக்கிடையிலான தொடர்பூடகம். உணர்வுகளை, கருத்துக்களை மற்றும்
சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளம். அதன் அடிப்படையில் கணணிக்கும்
மனிதனுக்கும் இடையிலான தொடர்பூடகமே இந்தக் கணணிமொழிகள். மனிதன் தனது
சிந்தனையை இம்மொழிகள் மூலம் கணணிக்குத் தெரிவிக்கிறான். அதனைக் கணணிகள்
உள்வாங்கிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் புரிதலின் அடிப்படையில் அந்த சிந்தனையை
செயற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லின் மனிதன் ஏவல் செய்ய, கணணி செயற்படுகிறது.
இந்த இருவருக்குமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வன கணணிமொழிகள் ஆகும்.
யாவா - சுருக்கமான வரலாறு
யாவாவின் வரலாறு எழுபதுகளிலேயே மெதுவாகத் தொடங்கிவிட்டதால், அதுபற்றி நிறையவே
எழுதலாம். இருந்தாலும் அவற்றை எழுதுவதன் மூலம் மேலதிகமாக பல தகவல்களையும்
விளக்கங்களையும் தரவேண்டியிருக்கும். எமது குறிக்கோள் "யாவா அடிப்படைக் கல்வி"
என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்கின்றேன்.
23 ஆம் திகதி மே மாதம் 1995 ஆம் ஆண்டு அன்று யாவா மொழி "SUN" நிறுவனத்தினரால்
கணணி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாவா என்னும் பெயர் இந்தோனேசியத்
தீவுகளில் ஒன்றான "யாவாத் தீவின்" பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததல்ல.
இந்தப் பெயர் அமெரிக்க மென்பொருள் வல்லுனர்களால் கோப்பிக்கு வழங்கிவந்த பெயர்களில்
மிகவும் விரும்பப்பட்ட பெயரில் இருந்து பெறப்பெற்றது.
No comments:
Post a Comment